பக்கம்:முல்லை கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5盛 "ஆறுமாத காலமாக படுத்த படுக்கையாகக் கிடந்த கோமதியம்மாள் இந்தப் பிரசவத்திலும் ஒரு பெண்ணைப் பெற்றுப் போட்டுவிட்டு கண்ணை மூடிவிடுவாள். குழந்தையும் தாயைத் தொடர்ந்து போய்விட்டால் தொல்லையில்லை. சாலைக் குமாரசாமி சன்னிதிக்கு வந்து முருகா என்று உட்கார்ந்துவிடலாம். நமக்கு அவன் தான் ஆண் சந்தானம்.' டாக்டர் குஞ்சிதம், ஆரூடம் அக்கினி ஜோசியர் இவர்கள் இருவரும் கொடுத்து தீர்க்க தரிசனத்தின் பிரகா ரம் மேற்படி முடிவுக்கு வந்த பிள்ளை, மனச் சஞ்சலத் தால் விரட்டப்பட்டு, பஸ் ஏறி திருநெல்வேலிக்கு வந்து ஒரு வாரம் ஆயிற்று தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று. நினைக்கும் என்பது அவருக்கு என்றுமில்லாதபடி நிதரிசனமாகத் தெரிந்தது. ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!'இல்லை என்று போனது தெய்வ சங்கற்பத்தால் இத்தனை வருஷங்கள் கழித்து இருக்கிறது என்று வீட்டுக்கு வந்திருக்கிறது. பிறந்தது ஆண் என்று காதில் விழுந்தால், யமனை விரட்டியடித்துவிட்டுப் பிழைத்துக் கொள்ளுவாள் கோமதி. பாவம், அவள்தான் எப்படித் தவித்தாள்: கொள்ளி வைக்கப் பிள்ளை இல்லாமற். போனால் குலத்துக்கு வசையாச்சே' என்று அவள் காக்காத விரதம், சுற்றாத கோவில் குளம், போகாத மாதாந்தம் உண்டா? கடைசியாக, குமாரசாமி, கரைக் கோயிலான் கண்ணைத் திறந்து பார்த்திருக்கிறான்! அவருடைய மனத்திலே, பிரவச அறையில் கிடக்கும் மதலை வளர்ந்து சிலேட்டும் புத்தகமுமாய்ப் பள்ளிக்கூடம் போயிற்று. பத்தாவது தேறி, பட்டணத்துக்கு ரயிலேறுகிறது. படிப்புக்கு ஆயிரம் இரண்டாயிரம் வேண்டுமே பையன் முகம் கறுக்கலாமா? உழைப்பு, உழைப்பு, ஓயாத விடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/54&oldid=881577" இலிருந்து மீள்விக்கப்பட்டது