பக்கம்:முல்லை கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கிறானுக. நாலும் பாத்து இறங்கணும். வசப்பிசகாக போய் மாட்டிக்கிட்டு உடும்பு வேண்டாம் கையை விடு என்கிற கணக்கில் வந்து சேரக்கூடாது' ......கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் ஒங்ககிட்ட வருவேனா? ...ஆள் தெரியாமலா இந்த பதினஞ்சு வருச காலமா, முக்குளிச்சுக்கிட்டிருக்கேன்...கையிலே, ஒரு முனு ரூவா என்ன, முப்பது ரூபா வேணுமின்னாலும் இந்த ரத வீதியிலே ஒரு வளையம் வந்தாச் சேராதா? மாராந்தைக் காவன்ன்ர் என்கிற விலாசம் லேசுப்பட்டதா என்ன?" - 'ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர்' என்று அலறினான் ஸ்டாண்டுப் பையன். "வண்டி வந்துவிட்டது' என்றார் பிள்ளை. கீழ்ச்சந்நிதித் தெருவிலேதான் புள்ளிக்காரன் இருக்கான். எதுக்கும் இண்ணைக்கு ராத்திரி பாத்திட்டா நல்லது வேறே எவனாவது தட்டிக்கிட்டுப் போயிடக் கூடாது, பாருங்க' - 'இல்லை, தம்பி மாராந்தைக்குப் போய் தலையைக் காட்டிவிட்டு, நாளை காலை வண்டியிலே வந்திட்டாப் போச்சு. அங்கே...... to or "இந்தக் காரியத்தில்ே காலதாமதம் கப்பலைக் கவிழ்த்துவிடும் என்கிறது உங்களுக்குத் தெரியாத விஷயமல்ல. எதுக்கும் ஒரு வார்த்தையைப் போட்டு வச்சிட்டால்......' - 'மாராந்தைக்கு அவசியம் ப்ோயாகவேனும். அங்கே நமக்கு பையன் பொறந்திருக்கானாம், இப்பத்தான் காயிதம் வந்தது' என்று மெல்ல ரகசியத்தை வெளியிட் டார் பிள்ளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/58&oldid=881585" இலிருந்து மீள்விக்கப்பட்டது