பக்கம்:முல்லை கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፳፮ "அடேடே, இவ்வளவு நேரம் ஒளிச்சு வச்சிட்டிகளே? ...ஆனாலும் இப்படி வெட்கப்படக்கூடாது நீங்க, பையன் யோக சாதகக் காரன்தான். அ ப் ப டி ச் சொல்லுங்க, ஒரு யோசனை தோணுது' "என்ன?" என்றார் பிள்ளை. 'ரெண்டுபேரும் மாராந்தைப் போவோம். கையிலே இருக்கிறதை எங்கிட்டத் தாருங்க. அடுத்த கடைசிவண்டி பத்தரைக்கு இருக்கு- இங்கே வந்திருதேன். ராத்திரியே கண்டு பேசி வைக்கிறேன். கார்த்தாலே நீங்க வந்து கலந்து மேல்காரியம் யோசிக்கலாம். எப்படி' பிள்ளை கொஞ்சம் தயங்கிவிட்டு சரி என்றார். "நாளைக்கு என்றால் செல்வாய்க்கிளிமை வ்ேறே விருது. நீ சொல்லுறது சரி. சாலைக் குமாரசாமி கோயிலுக்கு எதிர்த்த சத்திரத்திலே, எதுக்கும் ஒரு ரும் எடுத்துப் போடும். நாளை அங்கேதான் வந்து சேருவேன்' என்று தீர்மானமாகச் சொன்னார் மர்ராந்தையார். எட்டரைமணி 'ஆலங்குளம் பஸ் ஸ்டாண்டை விட்டு நகர்ந்தது. மாராந்தை மாரியம்மன் கீழ்த்தெரு, பிள்ளை வீட்டு வாசலில், இரவு ஒன்பதரை மணிக்கு வில் வண்டி ஒன்று தாயாராக நின்றது. வண்டிக்காரன் பக்கத்துக் கடையில் அவசரம் அவசரம்ாக விளக்கை ஏற்றிக் கொண்டிருந்தான். பிள்ளையும் ஆவுடை நாயகமும் .ெ வ வளி ேய வந்தார்கள். -- "நாளைக் காலையிலே தவறாம் புறப்பட்டு வாருங்க. கைவசம் கூட ஒரு நானூறு ஐஞ்நூறு இருக்கட்டும். எலுப்புத் துண்டு வீசவுேண்டியிருக்கும்,' பிள்ளை லேசாகச் சிரித்தார். பையிலே கவனம். ர்ாவேளை பாருங்க" என்று எச்சரித்தார். மு. க.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/59&oldid=881587" இலிருந்து மீள்விக்கப்பட்டது