பக்கம்:முல்லை கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 பிள்ளை இருந்த இடத்திலேயே அதிர்ந்தார் மைத்துனர் வார்த்தையை, இருட்டிலே நழுவ விட்டு விட்டு மெல்ல எழுந்து கூடத்தில் விரித்த ஜமக்காளத்தில் தலையைச் சாய்த்தார். நினைவு என்ற புற்றிலிருந்து ஈசல்கள் கிளம்பி மொய்க்க ஆரம்பித்தன. படுக்கை கொள்ளாமல் அங்கு மிங்கும் புரண்டார். வீட்டுக்குள்ளிருந்து, குழந்தை குவா குவா என்று அழுகிற சத்தம் வந்தது. அந்தச் சத்தம், அவர் மனப் புண்களில் மருந்து தடவி வாழைக் குருத்தால் ஒற்றியதுச் போன்ற சுகததைக் கொடுத்தது. அதைக் கூர்மையாக செவிகுளிரக் கேட்டபடி படுத்திருந்தார் பிள்ளை. மைத்து னரும் வைத்தியரைக் கூட்டிககொண்டு பதினோரு மணிக்கு வந்து சேர்ந்தார். கோமதியம்மாளுக்குப் பிரக்ஞை தப்பிவிட்டது. வைத்தியர் நாடியைச் சோதித்து விட்டு பார்க்கலாம்' என்றார். "குழந்தைக்குப் பாலூட்ட வேறு யாரையாவது ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டுப் புறப் பட்டார். அவர் முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. பிள்ளைக்குத் தூக்கம் வரவில்லை. இரவு மூன்று மணியிருக்கும். மைத்துனர் வந்து அழைத்தார். "அக்கா உ ங் க ைள ப் பார்க்கம்னு மிங்கிறாள்.” கோமதியம்மாள் படுக்கையில் வதங்கிக் கிடந்தாள். சிறிது பிரக்ஞை இருந்தது. சோகம் செறிந்த அவள் முகத்தில் ஒரு புதிய ஒளி ரேகை விட்டிருந்தது. காத்தபெருமாள் பிள்ளை பக்கத்தில் உட்கார்ந்தார். கோமதியம்மாள் படுக்கையிலிருந்து எழுந்தி ருக்க முனைந்தது அவருக்குப் பொறுக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/61&oldid=881593" இலிருந்து மீள்விக்கப்பட்டது