பக்கம்:முல்லை கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. படும், இங்கே கொடுத்த அச்சாரம் முங்கிப்போகுமிண்ணு கனவிலேயும் நெனச்சா இருந்தோம்?" "என்ன தம்பி, விவரமாச் சொல்லு' "திங்கக்கிழமை ராத் சிரியே புள்ளியைக் கண்டு பேசி ஆயிரத்தை அச்சாரமாகக் குடுத்தேன். சி.ஐ. டி. தொந்தரவு பலமாக இருக்கு. நீங்க சரக்கை நாளை ராத்திரிக்குள்ளே டெலிவரி' எடுத்துக்கிட ணும் அப் படிண்ணாங்க. நீங்க வருவீக, வந்ததும் தொகையைக் கட்டிப்புட்டு, சரக்கை அய்யர் கிட்டங்கியிலே தள்ளி செக் கை வாங்கிக்கிடலாமிண்ணு பிளான் போட்டிருந் தேன். காலையிலே ஒங்களைக் காணலை. தந்தியைக் குடுத்தேன். பதில் தெரிஞ்சதும் அப்படியே அசந்து, போய்ட்டேன். இதுக்குள்ளே போலீஸ், ஸி. ஐ டி. காரனுக்கு உளவுதெரிஞ்சி மும் மரமாக இருக்கிறதாகக் கேள்விப்பட்டேன். ஒண்ணும் ஒடலை, இங்கே வந்து பேசாமப் படுத்திட்டேன். நீங்க குடுத்த அஞ்ஞாறு என் கையிலிருந்த அஞ்ஞாறு ரெண்டும் மண்ணாய்ப் போச்சு’ பிள்ளை பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தார். பணம் பறிபோன அதிர்ச்சி அவர், நெஞ்சை ஒரு குலுக்குக் குலுக்கிற்று. 'ஏன் மண்ணாய்ப் போச்சு என்று வாயைப் பொத் திக்கிட்டு உட்காரணும்? போலீஸிலே எழுதிவைப்போம். ஏமாளிப் பயல்னு நெனச்சாங்களா?” ஆவுடை நாயகம் சிறிது சிரித்தான், பிள்ளைக்குக் கோபம் வந்தது. 'நீங்க, காரியத்தினுடைய வகை தொகை தெரியாதமாதிரி பேசுறீக, ஏன் குடுத்தே, எந்த சரக்குக்குக் குடுத்தே, "பெர்மிட் இருக்கா? இப்படி கேள்வி வளைச்சுகிட்டுவரும் வீண் தொந்தரவு, அகப் பட்டுக்கிண்டா அவமானம் வேறே.' 'இதெல்லாம் தெரிஞ்சுதான் என்னை இளுத்துகிட்டு வந்தியா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/65&oldid=881601" இலிருந்து மீள்விக்கப்பட்டது