பக்கம்:முல்லை கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

ம்.. அஞ்னுாறா?...அய்யனை நீங்க லேசுப்பட்ட ஆளுண்ணு நினைக்காதீங்க! எமன்கிட்ட கருப்பு மார்க் கட் பண்ணினவன் அவன்?

"நம்மகிட்ட பண்ணுகிற மாதிரிதான்." "ஆயிரத்துக்குக் கொறைஞ்சு அவனை மறுபடியும் நாடமுடியாது. யோகம் இருந்தால் பெரிய ரூபா நாலுக்கு ஒரு தட்டுத்தட்டலாம்.' "சரி, ஆயிரமே வச்சுக்க, இடம் எது?" சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஆவுடைநாயகம் பிள்ளை காதுக்குள் இட ரகசியத்தை உபதேசித்தான் "சரி, நீ போ. மிச்சத்தைக் கையிலே எடுத்துக்கிட்டு, நான் சரியாக பதினொரு மணிக்கு வாறேன்." ஆவுடைநாயகம் பணத்தை வாங்கிக்கொண்டு புறப் பட ஆயத்தமானான். . | 寧 s மறுநாள் காலை பத்து மணி வெயில் சுள்ளென்று அடித்தது. வீட்டிலிருந்து ஒரு கடிதம் வந்து அறையில் கிடந்தது. பிள்ளை எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டு அதை எடுத்தார். அவருடைய முகத்தில் விவரிக்க முடியாத வைராக்கியமும் கொடுமையும் குடி கொண்டிருந்தது. கடிதத்துக்குள் என்ன் சேதி இருக்கிறதோ என்ற சோதனையில் மனம் இறங்கியது. கைகள் கடிதத்தை உடைக்கத் தயங்கின. 'குட்மார்னிங் எனறு ஒரு ஸல்யூட் அடித்தான் எதிரே நின்ற போலீஸ் ஜவான். அவனை எங்கேயோ பார்த்தமாதிரி இருந்தது ஒரு துண்டுக் கடிதத்தை நீட்டி விட்டு அவன் போனான். கடிதம் ஸி. ஐ. டி. இன்ஸ்பெக்டரிடமிருந்து வந்தது. நெடுநாளாக நடந்துவந்த கூட்டுறவுக் கொள்ளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/67&oldid=881604" இலிருந்து மீள்விக்கப்பட்டது