பக்கம்:முல்லை கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፶፰

சொல்லிக்கிட்டே'ருக்கேன்"என்று சத்தமிட்டவாறே எழுந்து சென்று, பிள்ளையை உதறிப் பிடுங்கிவிட்டு, பாப்பாத்தியின் முதுகில் ஒரு அறை அறைந்தார். எதிர் பார்த்ததுக்கு விரோதமாக அடி உறைத்து விழுந்து விட்டது.

ஓவென்று அலறிக் கொண்டே கீழே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள், பாப்பாத்தி. 'எனக்குச் சோறும் வேணாம். ஒரு மண்ணும் வேணாம் நான் போறேன்" என்று கோபித்துக்கொண்டு, தச்சு முழம், கொத்துக் கரண்டி, ரஸ்மட்டம் முதலிய வற்றை எடுத்துக்கொண்டு திண்ணையில் கிடத்ததுண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு நடந்தார் பக்கிரி. அடிபட்ட முதுகைத் தடவிப் பார்த்துக்கொண்ட இசக்கி. கைவிரலில் தடம் தட்டுப்படும்போதெல்லாம் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தது. அதன் மனம் மட்டும் எதிர்த்த வீட்டுச் சுடலை சொன்ன கெட்டவார்த் தைப் பேச்சில் நின்றது. பாப்பாத்தியும் அழுதாள். உலையில் சோறு கொதித்தது. 露 線 黎 பூமி-சந்திரன்-சூரியன் கிரஹணம் பிடித்தாய்விட்டது 宰 ః 螺 பக்கிரிசாமி கொத்தப் பிள்ளைமார் குடியில் பிறந்து விட்ட காரணத்தினால், சிறுவனாய் இருந்த காலம் முதற் கொண்டே, கரண்டி பிடிக்கும் கட்டிட வேலையில் ஈடு பட்டார். கலியான மாகாமல் இருந்த காலத்திலும் கொகுலத்துக் கிருஷிணன்மாதிரிதான் வாழ்க்கை நடத்தி னார். அந்தத் தொழிலில் வசதிகள் ஜாஸ்தி. அவர்களு டைய பறிக்க முடியாத உரிமை அது கட்டிட வேலைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/74&oldid=881621" இலிருந்து மீள்விக்கப்பட்டது