பக்கம்:முல்லை கதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 1943-44ல் உலகம் முழுவதும் போர்மேகம் பரவியது. அப்போது பெரும்பான்மையான பொருள்கள் வெளி நாட்டிலிருந்து வரவேண்டியதாயிற்று. அ வ ற் றில் காகிதமும் ஒன்று அப்போது நம்நாடு சுதந்திரம் பெறவில்லை. - - புது பத்திரிகை தொடங்க அரசாங்கம் அனுமதி: இல்லை. அப்போது ஏ. கே. செட்டியார் குமரி மலர்' மாதம் ஒரு புத்தகம் என்ற பெயரில் தொடங்கினார். அதைப் பார்த்ததும் 1945இல் முல்லை மாதம் ஒரு புத்தகமாகத் தொடங்கினேன். - போஷகர்' என்ற சொல்லுக்கு ஆதரவாளர்' என்ற தமிழ்ச் சொல்லை பயன்படுத்தி முல்லை முதல் வெளியீடு வந்தது. முல்லை இதழுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஒவ்வொரு இதழிலும் கவிஞர் கவிதைகளைத் தேடி எடுத்துப் போட்டேன். மேலும் கவிஞர் உதிர்த்த, முத்துக்கள் வெளியிடப்பட்டது. ஒர் ஆண்டு இவ்வாறு நடந்தது அதன் பிறகு, ரகுநாதனை ஆசிரியராக நியமித்து மறுமலர்ச்சி இதழாக சில இதழ்கள் வெளிவந்தது. - முல்லை இதழில் வெளிவந்த 10 கதைகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதை அடுத்து 'முல்லை கட்டுரைகளும் வெளிவர உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 323/10, ಣ್ವಸ್ಥೆ :) அண்ணா நகர் மேற்கு ல்லை பிஎல். முக்கையா சென்னை-600 0 19 மு முததை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/8&oldid=881633" இலிருந்து மீள்விக்கப்பட்டது