பக்கம்:முல்லை கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பக்கிரிக்கு உடல் குளுகுளுத்தது. 'அடிக்கணும்னாஉறைச்சி விழுந்திட்டுது' பாப்பாத்தி களுக்கென்று சிரித்தாள். "நேத்து ஏன் வரலே' - "அதுக்கென்ன இன்னைக்கித்தான் வந்திட்டெனே தூக்கம் கலைந்து உசும்பிய இசக்கியின் காதுகளில் பேச்சுக் குரல் விழுந்தது. யார்? ஒருத்தருக்கொருத்தர் 'டு' போட்டுக் கொண்ட அம்மாவும் அப்பாவுமா பேசு கிறார்கள்? அதற்கே ஆச்சரியமாயிருந்தது. "நான் அம்மா பக்கமில்லா படுத்திருந்தேன்! இது அதன் நினைப்பு. விழித்துப் பார்த்தது. கிரஹங்ங்கள் நிலைமாறியிருந்தன. சந்திரன்- சூரியன் - பூமி. கிரஹணம் விடுபட்டுக் கொண்டிருந்தது. இசக்கி ஒன்றும் புரியாதவாறு உர்ரென்று பார்த்தான். மாடக்குழித் தகர விளக்கு ஆடி அசைந்து ஒளி கொடுத்தது. பாப்பாத்தியும், பக்கிரிசாமியும் பேசினார்கள். இசக்கியின் காதில் பேச்சு சரியாக விழவில்லை, அப்பாவும் அம்மாவும் என்னதான் செய்கிறார்கள்? இச்சென்ற சப்தம். அம்மாவும் அப்பாவும் ஒரே பாயில் ஒருவரை யொருவர் அணைத்துப் பட்டு த் து க் கிடந்தார்கள். அப்பா அம்மாவை முத்தமிட்டார் அப்புறம்?......' இசக்கி உர்ரென்று பார்த்தாள். பசி-கெட்ட வார்த்தை!' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/80&oldid=881635" இலிருந்து மீள்விக்கப்பட்டது