பக்கம்:முல்லை கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 "சுடலை கெட்டவார்த்தை செய்யக் கூப்பிட்டப்போ மாத்திரம் அம்மா என்னை அடிச்சாளே! இப்போ!' அதன் சிந்தனை அதிக தூரம் செல்லவில்லை. கொஞ்ச நேரத்தில் அசந்து தூங்கிப் போய்விட்டாள். கிரஹங்கள் அந்தப்படியே இருந்தன. கிரஹணம் விடுபட்டது! 燃 裳 # காலையில் எழுந்தவுடன் இசக்கி அம்மா அப்பாவை யும் குர் ரென்று பார்த்தாள். பாப்பாத்தி இசக்கியிடம் வந்து "உடம்பு ரொம்ப வலிக்குதாடி, கண்ணு' என்று முதுகைத் தடவிப் பார்த்தாள். அணிலின் முதுகில் ராமரிட்ட தடம்போல, கைவிரல்களின் மசசம் அதிலிந் தது. அப்படியே குழந்தையை அனைத்துக் கொண்டாள். பின்னெ பச்சைப் புள்ளெயே-' என்று உத்ஸாகத் தோடு பேச்சை ஆரம்பித்த பக்கிரிசாமி துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியே போகத் தயா ரானார். 'அடிக்கிற கைதான் அணைக்கவும் செய்யும்' என்று சொல்லிவிட்டு, குழந்தையைத் தழுவினாள், பாப்பாத்தி. "யார் கை? உங்கையா, என் கையா? என்று இடக்குப் பேசினார் பக்கிரி. நீங்கள் போங்க' என்று செல்லமாய்ச் சொன்னாள். பக்கிரி சிரித்துக்கொண்டே வெளிக்கிளம்பினார். வெளியே போய்விட்டு வரும்வழியில் கசாப்புக்கடை கண்ணில் பட்டது. "கால்சேர் கறி வாங்கிக்கிட்டுப் போனா என்ன?' என்ற யோசனை தட்டுப்பட்டது. வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/81&oldid=881637" இலிருந்து மீள்விக்கப்பட்டது