பக்கம்:முல்லை கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கை க. கணபதி, "காதல் புனிதமானது என்று கதைப்பதெல்லாம் கவிகளின் கற்பனையில்தான்; அல்லது உணர்ச்சியின் உத்வேகம் தணிந்த பின்பு வாழ்க்கையின் அஸ்தமன காலத்தில் ஒரு வேளை ஏற்படலாம்...' 'அம்மா! இதோ எங்க புது டீச்சர்!'-என்று எக்களிப்புடன் ஓடிவந்தாள், என் ஏழுவயதுப் பெண் மல் லிகா. அவள் மலர்ந்த முகத்தில் மனம் நிறைந்த மகிழ்ச்சி பிரதிபலித்தது. அன்பில் ஊறிய ஆர்வம் அவள் கண்களில் தெறித்தது. என் செல்வியின் உள்ளத்தைக் கவர்ந்ததோடு இவ்வின்பக் காட்சிக்கும் வித்தான அவ்வுத் தமியைக் காணும் உவகையோடு விரைந்து சென்று,'வாருங்கள், வணக்கம்' என்றேன். மறுமொழி யொன்றுங் கூறாமல், பரவசத்துடன் என்னை இறுகத் தழுவிக் கொண்டாள் என் மகளின் டிச்சர்! திகைப்பினால் என் வாய் அடைத்துவிட்டது. அவள் அணைப்பிலிருந்து மெல்ல விடுவித்துக்கொண்டு ஏற இறங்கப் பார்த்தேன். - 'யார்-என் ரூபியா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/83&oldid=881641" இலிருந்து மீள்விக்கப்பட்டது