பக்கம்:முல்லை கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 4 'ம்...உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப்போகிறேன்?" என்று நீண்ட பெருமூச்சுவிட் டாள். பிறகு, 'உன் கல்யாணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு: தமது பள்ளிக் கூடத்தில் ஒரு புது வாத்தியார் வந்தாரேநினைவிருக்கிறதா?' '

  • யார்? விக்டரா?" - "ஆமாம்! விக்டர் ஜெயராஜ்தான்!'

என் நினைவுத் திரையில் ஒரு ஆணழகனின் கம்பீர உருவம் காட்சியளித்தது. "...அவரைக் கண்டது முதல்...என் மனம் அவரையே நாடியது. நாளடைவில் பரஸ்பரக் காதலாக அரும்பியது. கதையை வளர்த்துவானேன். பெரியோர்களிடையே பேச்சு வார்த்தை நடந்து கல்யாணமும் நிச்சயமாயிற்று. அப்பா மலேயாவிலிருந்து அடுத்த மாதம் வந்ததும் கல் ாணத்தை நடத்துவதாய் ஏற்பாடாயிருந்தது. இதற். கிடையில் கோடை விடுமுறை வரவும் அவர் குடும்பத்தி னர் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர் அவரை மட்டும் எங்களுடன் தங்கும்படி வேண்டினேன். அம்மாவும் வற்புறுத்தவே அவரும் இணங்கினார். - - 'நாலைந்து நாள் குஷாலாகக் கழிந்தது என்றாலும் என் வரையில் எனக்கு ஒரு குறைதான். எப்பொழுதும் அம்மாவும் எங்களுடனேயே இருப்பார்கள். பீச்சுக்குப் போனாலும் அப்படியே, எனக்குச்சங்கடமாகவும் ஆத்திர மாகவும் வரும்.-எனினும் இன்னும் எத்தனை நாளைக்கு? -கல்யாணம் ஆகும் வரையில் தானே? அதன் பிறகு.?என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். அதோடு நாள் முழுவதும் அவருடனேயே ஒரே வீட்டில் இருந்து கூட ஒரு நிமிஷமாவது தனிமையில் சந்திக்க முடிய வில்லையே என்று எண்ணி ஏங்குவேன். அவர் எப்பொழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/86&oldid=881647" இலிருந்து மீள்விக்கப்பட்டது