பக்கம்:முல்லை கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 இருப்போம்" என்று கருதுகிறீர்கள். உங்கள் 'தொல் லையை' நான் முழு மனசுடன் வரவேற்று அவர்களி டையே வாழ்ந்து இன்பங்காண்கிறேன், அவர்களுடைய பிஞ்சு உள்ளத்தில் சூது வாது இல்லை, பொய்மையில் ைல ஒளிவு மறைவு முகஸ்து தி ஏமாற்று எதுவுமே யில்லை. அவர்கள் மெல்லிய இதய மலர் விரிந்து மலர்ந்து, அங்கே மெய்யன்பு கனிவதைக் கண்டு களிக்கிறேன். மலர்களைப் போலவே...' வாஸ்தவந்தான்! இருந்தாலும்.அது இாவல் சுகந் தானே! அவை உன் குழந்தைகளாகவேயிருந்தால்...? 'என் குழந்தைகள்!' என்று நீண்ட பெருமூச்சு விட்டாள். "ஆனால், உடலின்பம் மிருக உணர்ச்சிதானே! ஆகவே மனிதர்களும் உணர்ச்சியின் உத்வேகத்தில் மிருக மாகத்தான் நடந்து கொள்ளுகிறார்கள். அங்கே கேவல மான் போட்டியே நிரந்தரமாக நிலவுகிறது. தாயின் பாசம், தந்தையின் பரிவு, கணவரின் காதல். மக்களின் கடமை, நட்பின் நலம்-எல்லாம் உணர்ச்சித் தீயில் பட்டு வெந்து சாம்பலாகி விடுகிறது. எஞ்சி நிற்பது சுய நலமும், ஆண்-பெண் என்ற இன உணர்வும்தான். அன்பு, ஈவு, இரக்கம் கடமை என்பது போன்ற மனித உணாச்சிகள் அங்கே ஊற்றெடுப்பதில்லை. காதல் புனித மானது என்று கதைப்பதெல்லாம் கவிகளின் கற்பனையில் தான். அல்லது உணர்ச்சியின் உத்வேகம் தணிந்த பின்பு, -வாழ்க்கையின் அஸ்தமன காலத்தில் ஒருவேளை ஏற் படலாம். இதுவே என் அனுபவம் சொல்லிக் கொடுத்த, பச்சை உண்மை. நிர்வாணமான உடலைப் பார்க்கக் கண் கூசுவதுபோல உண்மையையும் நிர்வாணமாகப் பார்க்க உள்ளம் கூசத்தான் செய்யும். அதற்காக ஆழகான வார்த்தைகளினால் மூடி அலங்கரித்து நம்மையே நாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/89&oldid=881653" இலிருந்து மீள்விக்கப்பட்டது