பக்கம்:முல்லை கதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தருமனும் அயர்ந்துவிட்டான். என்றைக்கோ செய்து விட்ட பாபத்தின் குறுகுறுப்பு நெஞ்சைக் குடைந்தது. "பாண்டு வம்சமே நிர்முலமா கட்டும். திரெளபதியை எத்தனை தடவையாயினும் பங் க ப் ப டு த் த ட் டு ம். கெளரவர் கூட்டமே ஆட்சி செலுத்தட்டும். பாண்டு மரபில் ஒரு பேடியும் வாழ்ந்தால்-' என்று சலித்துப் போய் முனகினான் தருமன். அர்ஜுனன் நிதானத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு, 'அண்ணா. இன்றைய தோல்வி தங்கள் நிதானத்தை நிலைகுலைத் திருக்கிறது. கர்ணன் மடிவது நிச்சயம். காண்டீபத்தின் சேவைக்கு கர்ணனின் ரத்தந் தான் கடைசி ஆகுதி' என்றான். போதும் உன் பேச்சு' என்று சின்ந்துகொண்டு எழுந்தான் தருமன். அர்ஜூனனின் நிதானத்தின் பிடி தளர்ந்துவிடும் போலிருந்தது. அண்ணா என்று அழைக்க வாயெடுத் தான். "என்னை அண்ணன், என்று அழைக்காதே. இங் கிருந்து போகிறாயா. இல்லை?” என்று சிந்ைது குமுறி னான் தருமன். அர்ஜுனன் எழுந்தான். அவனை மறியாமல் அவன் கண்களில் நீர் நிரம்பியது. 'போதும். காண்டீபமே தொலைந்து போகட்டும். தங்களுடைய உதாசீனக் கொதிப்பைவிட, கர்ணனின் பாணம் குளிர்ந்து தானிருக் கும்' என்று கூறிவிட்டு, காண்டீபத்தை எடுத்து முழங் காலில் கொடுத்து முறிக்கப் போனான். தருமன் அதைத் தடுக்கவில்லை. விறைப்புடன் நின்றான். மனசில் அத்தனை வெறி. 'அர்ஜூனா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/94&oldid=881664" இலிருந்து மீள்விக்கப்பட்டது