பக்கம்:முல்லை கதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 கண்ணா, உன் வியாக்கியானமே தேவையில்லை' என்று சுருக்கினான் தரும்ன். எனினும் குரலில் விறைப்பு குறைந்து தலையும் தொங்கிப் போய்விட்டது தருமனுக்கு: 'அர்ஜுனா, தருமனுக்குத் தோல்வி வெறி குலைய வில்லை. சரி. நாம் போகலாம். இந்தா பிடி வில்லை' என்று கூறினான். அர்ஜுனன் கைநீட்டவே மறுத்தான். "பிடி வில்லை!" என்று கடுமையாகச் சொன்னான் கண்ணன். 'முடியாது. என் கை கூசுகிறது' என்றான் அர்ஜுனன். கண்ணனுக்கு அர்ஜுனனின் அலட்சியம் கோபத்தைக் கிளறியது. அர்ஜுனா, அன்று நான் போதித்ததை யெல்லாம் மறந்து விட்டாயா? இந்தா பிடி வில்லை. உன் குருவின் ஆக்ஞை. காண்டிடத்தைப் பிடி!' என்று ஆணையிட்டான். "வில்லை ஏந்தக் கற்றுக்கொடுத்தவர்தான் விரோ தியாய்விட்டாரே. இன்னும் என்ன இருக்கிறது?' "துரோணருக்கும் மகத்தானவன் நான். நான் உன் ஆத்ம குரு, நீ என் அடிமை ' 'கண்ணா, பகைவன் யாராயிருந்தாலும் பார்க்கக் கூடாது என்றாயே இன்று உடன் பிறந்த , தமையனே என்னை விரோதிக்கும் போது?" 'கர்ணன்...' என்று எடுத்த வார்த்தையைக் கண்ணன் விழுங்கி விட்டான். பிறகு அர்ஜுனா உனக்கு இன்னும் தெளிவே இல்லை. எல்லாவற்றிற்கும் காரண காரியம் நான். கடமையைச் செய்வதே உன் தொழில். அதன் பலனை அறிய உனக்கு அதிகாரம் கிடையாது,' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/96&oldid=881668" இலிருந்து மீள்விக்கப்பட்டது