பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மாந்தர் பாங்கில் முல்லே மணம் கட்டிளமையின் கலே, யாச்சின்னம். அவனுக்கு அன்றுவரை மணக்கும். இவளுக் ,கோ இன்றும் மணக்கின்றது; என்றும் மணக்கும்.

அவ்வாரு ல்ை பெண்களின் உடலில் மணமிருக்காதோ என்ருேரு ஐயம் எழுதல் இயல்பு. அந்த ஐயம் இன்றியமை யாததுங்கூட. இதற்கு விடையாக 'கொங்குதேர் வாழ்க்கை” பற்றி எழுந்த பூசல் சான்றுக்கு வருகின்றது. பாண்டிய மன்னனது பட்டத்தரசி கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு: என்பது இறையனர் என்னும் புலவரது கருத்து. மற்று மொரு சான்ருக மாதவி வருகின்ருள். காட்டு வழியில்: கோவலனிடம் கோசிகன் என்பான் மாதவி தந்த முடங்கலே வழங்கினுன். பெற்ற கோவலன் அம்முடங்கல் முடக்கிப் பொதிந்துள்ள இடத்தை மோந்தான். அது மணந்தது. மாதவி முடங்கலைப் பொதிந்து அரக்கிடுவது போன்று சாந்தால் மூடி முத்திரைவைத்தாள். தனது கூந்தலே அழுத்தி அனுப்பியிருந்தாள். அந்தக் கூந்தலின் மணத்தைக் கோவலன் மோந்து அடையாளங் கண்டுகொண்டான். தழுவிப் பழகிய மாதவியின் உடல் கூந்தலின் மணம் மாதவியது மணத்தை கினேவில் நிறுத்தியது. இலக்கியங்கள் பலவும் மகளிரை மனம் வீசும் மலர்களாகக் குறிக்கின்றன. எனவே, மகளிரும்: மணக்கும் உடலினராவர். ஆல்ை, கன்னிப் பருவத்தில் மட்டுமன்று. கற்புக் கலையாதவரை-பிற ஆடவரை எண்ணு. தவரை-எண்ணிக் கூடாதவரை அவர் மணக்கும் மலரே யாவர். மகளிரது உடலமைப்பாலும் பருவ ஊற்றத்தாலும் ஒழுக்க ஏற்றத்தாலும் நான்கு வகைப்படுவர் என உடல், முத்திரை இலக்கண (சாமுத்திரிகா இலக்கணம்) நூல்கள் பகுத்துப்பேசும். பதுமினி முதலிய அந்நால் வகையினர் உடலும், தாமரை முதலிய நான்கு மணம் வீசும் என அந்நூல். கள் குறிக்கின்றன. ஆடவரது உடல் மணமும் கற்புடைய பெண்டிரது நற்ருெடர்பால் முல்லை மணம் மாறினும் மற்றைய மணத்தில் திகழ்வதுமாகும்.