பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

சூடப்படும் மலர்கள். புறமலர்கள் சிலபோதுமட்டும் சின்னத் திற்காகக் குடப்படும் மலர்களாக உள்ளன. இவை மணங். கருதிச்சூடா மலர்கள்.

ஒவ்வொரு கடவுளர்க்கும் ஒவ்வொரு மலர் உண்டு. மலரோன், தாமரையான், தாமரையினுள், அலர்மேல்மங்கை எனப் பல மலரால் கடவுளரது பெயரைக் கண்டனர். வள்ளுவப் பெருந்தகை இறைவனே உருவகப்படுத்தியவர் "மலர்மிசை ஏகினுன்" என்று இறைவனே மலர் மேல் கடக்க வைத்தார். மன்னர்க்கு அடையாளப் பூக்கள் அமைந்தன.

மக்கள் வாழ்விலும் மலர் பெற்ற இடம் - மலரைத் தமிழர் தழுவிக்கொண்ட திறம் தேய்ை இனிப்பதாகும். மக்கள் உடலில் மணம் அமைவது என்பது சிறப்பாக இயற்கை. யில் அமைவது; பொதுவாகச் செயற்கையில் அமைவது. செயற்கையில் நாம் இணைத்துக்கொள்ளும் மணம் மலர்களா லும், மணப்பொருள்களில் ஊறிய சிேல் ரோடுவதாலும், மணப் பூச்சுக்களாலும், மணச் சுண்ணத்தாலும் உண்டாவது. தமிழர் அச்செயற்கையிலும் இயற்கை மலரையும், மலர்த். தாது என்னும் மலர்க்கருவின் மெல்லிய பொடியையும் கொண்டனர். இப்பொடி நாம் இக்காலத்துப் பயன்படுத்தும். "பவுடர் - மணத்துாள் போன்றது. சூடும் மலர்கள், சூடா மலர்கள் எனவும் அவற்றின் மணங்கருதிப் பாகுபடுத்தினர். மலரின் அழகு ஒன்றை மட்டும் கருதிச் சூடிக்கொள்வதில்லை. கண்டவுடன் கவர்ந்து இழத்து ஓடிப்போய் அள்ளிக். கொள்வதுபோன்ற அழகு மலராயினும் மணமின்றேல் அது குடும் பூ அன்று என்பதை,

"அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்

கள்ளிமேல் கைநீட்டார் சூடும்பூ அன்மையால்"

- என்னும் பாடல் மணமில்லா அழகை ஒதுக்கிப் பாடுகின்றது.

7 நாலடியார்: 262