பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

குடும் மலர்களிலும் ஆய்ந்தெடுத்தே சூடுவர். மகளிர் பெரும் பழக்கமாக தலையில் தனி மலராகவும் சூடுவர்: கோத்த கோவையாகவும் சூடுவர், ரோடியதும் ஒன்றிரண்டு மலர் களேச் சூடிக்கொள்வர். கழுத்தில் மாலேயாக அணிவது சிறு: பான்மையாகவும், மங்கல நிகழ்ச்சியினதாகவும் அமைந்தது. ஆடவர் தலைக் குஞ்சியில் சுற்றி அணிவர். மார்பில் தோளில் படியுமாறு அணிவர். பெருஞ்செல்வரும் மன்னரும் நீராடி. யதும் மலராகும் பக்குவத்திலுள்ள போதுகளால் ஆன மாலையை அணிந்துகொள்வர், போது விரிந்தால் வண்டு. அதன்கண் உள்ள தேசீனப் பருகிவிடும். தேன் போனுல் மணம் குறைந்ததாகும். எனவே, போதுகளால் கட்டிய மாலையை அணிந்து அது விரிந்து மார்பிலோ தோளிலோ மலராகி மணம் ஊட்டுவதை விரும்பினர். அவ்வாறு மார்பில் மலர்ந்த மாலையை வண்டுகள் சூழ்ந்து மலரில் அமைவதை. இலக்கியங்கள் பேசுகின்றன.

ஆடவர் மார்பிலும் தோளிலும் அணிவதோடு தோளிலும் கையிலும் சுற்றி அணிந்துகொள்வதுமுண்டு. காதில் பூவைச் சூடிக்கொள்வர். இதனே, பெருமாள் திருமொழி,

8 'மங்கல நல்லன மாலை மார்வில்

இலங்க மயில்தழைப் பீலி சூடி, பொங்கிள ஆடை அரையிற் சாத்திப்

பூங்கொத்து காதிற் புணரப் பெய்து"

- எனக் காட்டுகின்றது.

மகளிரும் காதிற்பூவைச் சூடுவர். காதலன் காதலியின் காதில் நீலப்பூவைச் சூட்டிப் பார்ப்பான். இதனே நைடதம்,

2 "கோதை மார்பன்.ஓர் கோல்வளை காதினில்

மாதர் நீலம் புனைதலும்" - எனப் பாடுகின்றது.

8 பெருமாள் திருமொழி : 6: 9. அ நைடதம் : போதுகொய் படலம் : 18.