பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

19 "மாதர் நுழைமருங்குல் நோவ மணிக்குழைசேர்

காதில் மிகைநீலம் கைபுனைவீர்" - எனத் தண்டியலங்காரமும் எடுத்துக்காட்டுகின்றது.

இக்காலத்தும் காதில் செருகிக்கொள்வதை அருகிக் காண்கின்ருேம்.

மலர்கள் மாலையாயின. மாலே என்பது பொதுப்பெயர். தொடுக்கப்படுவது தொடை தொடையல். தொங்கி அசைவது தொங்கல். அடியில் இக்ணக்கப்படாமல் தோளில் புரள்வது தார். விரிந்த மலரால் ஆகியது அலங்கல். தலையில் ஆடவர் சூடுவது கன்னி. மகளிர் தலையில் சூடுவது கோதை. ஆடவர் கோதையை மார்பிலும் அணிவர். இதனைக் :9, "கோதை மார்பிற் கோதையானும்" எனப் புறப்பாட்டு காட்டு கின்றது. கோதையை அணிந்த மன்னன் 'கோக்கோதை மார்பன் எனப்பட்டான். கோதை பெண்ணேக் குறிக்கும் சொல்லாயிற்று.

மாந்தர் சூடும் தொடர்பில் மலர் நெருங்கியது போன்று புலவர்கள் தம் மொழியை மலராகவே கொண்டனர்.'

11 "பழுதகன்ற நால்வகைச் -

சொல்மலர் எடுத்து" - எனச் சொல்லே மலராக்கினர். :பூவாலாகியது பூமாலை. பாவாலாகியது பாமாலே எனப் பட்டது. தெய்வப் பாமாலே தே ஆரம்-தேவாரம் எனப் பட்டது. மாங்குடி மருதனுர் என்னும் புலவர் தமிழையே மல்லிகை மாலையாகத் தொடுத்தார்.

சொல் மலராம்; பொருள் தாது ஆகி மணமாம்; பாண்டியன் வண்டாம், அப்பாண்டியனும் குளிர்ந்த தார் அணிந்தவனம். இதனை, •

19 தண்டியலங்காரம்: சான்று வெண்பா 1 புறநானூறு: 48