பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

கின்றன். மலரும் அரும்பி, மலர்ந்து மணந்து வாடிச் சருகா கின்றது. மாந்தர்க்குப் பருவங்கள் உண்டு மலருக்கும் பருவங்கள் உண்டு. பருவ வகையை மலரைப் பார்த்துத் தான் அமைத்துக்கொண்டானுே என்று ஐயங்கொள்ளும் அளவு மாந்தர்க்கும் மலர்க்கும் ஒற்றுமை உண்டு.

தனி யொருவன் மாந்தன்; தனியொன்று மலர்; யூ. மக்கள் தொகுதி, மன்பதை; மலரின் தொகுதி இனர்,

துணர், தொத்து, கொத்து.

மலரின் பொதுப்பெயர் பூ அதன் தோற்ற வளர்ச்சி யில் பருவ மாற்றங்கள் உள்ளன. மலருக்கென அமைந்த சொற்களே அவற்றைச் சொல்கின்றன. மலரைக் குறிக்க எழுந்த சொற்கள் பல. ஒவ்வொன்றிற்கும் துணுக்கமான பொருள் வேறுபாடு உண்டு. அவ்வாறுள்ள வேறுபாடு அதன் பருவக் குறிப்புக்களாகும். - -

செடியில் நனப்புடன் (நீர்ப்பிடிப்புடன்) முளைத்து வருவது நன. ஒன வளர்ந்து முனைப்பது அருப்பு: அரும்பு பருத்து இதழ்கள் கட்டவிழ்வது முகை: (இஃதே முகுளம், மொக்குள், மோட்டு எனப்படும்) மலரும் பொழுதைக் கொண்டது போது (பொழுதை அறிவிப்பதாலும் இப் பெயர் பெற்றது; இது போகில் எனும் சொல்லாலும் வழங்கப்படும்.)

இவ்வாறு மலரின் வளர்ச்சியில் ஏழு படிகள் அமை கின்றன. அவை ஏழும் மலரின் ஏழு பருவங்கள்.

1 தமிழில் மகளிர் பருவங்களேயும் ஆடவர் பருவங்களே யும் இலக்கணமாக வகுத்து இலக்கியங்கள் படைக்கப்பட் டுள்ளன. மகளிர் பருவங்கள் ஏழு. ஆடவர் பருவங்கள் ஏழு. மலரின் பருவங்களும் ஏழு. அவற்றைப் பின்வரும் முறையில்

பட்டியலிட்டால் பொருத்தம் புலப்படும். -

  • பாட்டியல் நூல்கள்.