பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இழப்பு அழுதற்குரியது என்பதை அறிவிக்கின்றதாகக் கொள்ளலாம்.

சோவியத் நாட்டின் பழங்குடி மக்களில் ஓர் இனத்தா ரிடையே ஒரு பழக்கம் உண்டு. ஒரு பெண் திருமண நிகழ்ச்சிக்கு முன்னர் தனி ஓர் இடத்தில் அமர்ந்து கண்ணிர் விட்டுச் சிறு பொழுது அழுவாள். அதன்பொருள் அந்தோ!' எனது கன்னிப் பருவம் அழிகின்றதே என்று எண்ணிக் கலங்கும் கருத்தினதாகும். இப்பழக்கம் மரபாகி இன்றும் ஒரு கரணம், கோன்பு போன்று நிகழ்கின்றது.

பருவங்களில் கன்னிப் பருவமும், விடலைப் பருவமும் ஒரு தனி உரிமைப்போக்குடையன. அவ்வுரிமை கழிவது ஒர் இழப்பு தான்; மீண்டும் அது கிடைக்காததால் ஓர் இறப்புதான். இந்தப் பருவச் சாவு மலருக்கும் பொருந்தும்.

15 " எழுமை எழுபிறப்பு "-என்னும் குறள் காட்டும் "எழுமை இந்த ஏழு பருவங்களின் குறிப்பு எனலாம். எனவே, பருவத்தால் மாக்கரும் மலர்களும் தத்தம் வாழ்வில் ஏழு பிறப்புகளே அடைகின்றன.

மலரின் நறுமணமும்

மங்கையின் திருமணமும்

மலருக்கும் மாந்தர்க்கும் உள்ள தொடர்பில் மலர்க்கும் மகளிர்க்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. அவள் பூவால் பெற்ற பெயர் பூவை. தலைமாலேயாம் கோதையால் பெற்ற பெயர் கோதை. இரண்டும் இணையப் பெற்ற பெயர் பூங்கோதை. மகளிர் ஒவ்வோர் உறுப்பின் அழகும் ஒவ்

  • திருக்குறள் : 1.07.