பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

வொரு மலரை உவமையாகக் கொண்டது என்பதை அறிவோம். முகம் தாமரை. கூந்தல்கட்டு வாழைப்பூ: கண் குவளைமலர். முக்கு எள் பூ. காது காயாம்பூ இதழ் இலவம்பூ-முள்முருங்கைப் பூ பல் முல்லே அரும்பு,கொங்கை கோங்கு. கை காந்தள். அடி அனிச்சம். இத்துணே மலர் கள் பூத்த அவள் ஒரு பூங்கொடி.

மலர் காட்சியழகால் கண்ணுக்கு விருந்தளிப்பது. அதனேச் சூழ்ந்த வண்டிசையால் செவிக்கு விருந்து. சுரக்கும் தேல்ை வாய்க்குச் சுவை வழங்குவது. மணத்தால் முக்குக்கு விருந்து. மென்மையால் உடலுக்கு விருந்து. இவ்வாறு ஐம்புலனுக்குரிய மகிழ்ச்சியும் ஒள்ளிய மலரிடம் உண்டு.

" "கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள" - எனத் திருவள்ளுவர் மங்கையிடம் ஐந்தும் கூடிய இன்பம் உள்ளதைக் காட்டு கின்ருர். மலரின் தன்மையாலும் மங்கை மலராவாள்.

இந்த ஐந்தொடு மற்ருெரு ஐந்தும் பொருந்துகின்றது. காம உணர்வு ஊற்றெழுவதை ஓர் உருவகமாக்கினர். காமத்தை எழுப்புபவன் காமன் என உருவகப்படுத்தினர். அவன் கரும்புவில்லில் ஐந்துஅம்புகளே வைத்து எய்கிருன் என்றனர். அவ்வைந்து அம்பும் ஐந்துமலர்கள். முல்லை அசோகு, குவளை, மாம்பூ, தாமரை என்பன அவை. ஐந்து தன்மைகளால் காம இன்பத்தில் பொருந்தும் மலர், ஐந்து அம்புகளாக அவ்வுணர்வை எழுப்புவதும் ஒரு பொருத்தமே ஆகும்.

மலருக்கு ஐந்து தன்மைகள் இருப்பினும் அவற்றுள் முதன்மையானது மென்மை எனலாம். அன்பின் பிணேப்பான இல்லற வாழ்வுதான் காதல் வாழ்வாகும். காதல் பிணைப்பால்

" திருக்குறள் : 1.11ெ