பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

பெதும்பையிலிருந்து மங்கைப் பருவம் அடைதல். மங்கை யாக அமையும் பக்குவத்தைக் குறிக்கும் சொல், பூவால் அமைந்துள்ளது. அது "பூப்பு" என்பது. மங்கைப் பருவம் அடைந்த பெண்ணுக்கு மங்கல நீராட்டல் "பூப்பு ரோட்டு" எனப்படும்.

திங்கள் தோறும் அப்பக்குவம் புதுப்பிக்கப்படுவது "பூப்பு நாள்" எனப்படும். அக்காலம் தாய்மைக்குப் பக்குவம் பெறும் காலமாகும். மலர் பூத்துத் தாதுத் துளைப் பரப்பிச் சூல் கொள்ளப் பக்குவம் பெறுவதை இஃதொக்கும். இலக்கண நூல்கள் இந்நாள் தாய்மைக்குத் தொடக்கம் என்பதைக் குறிக்கின்றன. இந்நாள் தொடங்கி மூன்ரும் காளில் நீராடியபின் பன்னிரண்டு நாள்கள் கருத்தரிக்கும் காளாகையால் மகப்பேறு வேண்டுவோர் இப்பன்னிரு .காளிலும் மனேவியைப் பிரியார் என்பதை,

19 "பூப்பின் புறப்பாடு ஈரறு நாளும்

நீத்தகன்று உறையார் என்மனுர் புலவர்" - என்றும்,

20 "பூத்த காலப் புனையிழை மனைவியை

நீராடியபின் ஈராறு நாளும் கருவயிற் றுறு உம் கால மாதலின் பிரியப் பெருன்" - என்றும் இலக்கண நூல்கள் குறிக்கின்றன. முன்னரே காதலன் பிரிந்திருப்பினும் தோழி வாயிலாக அவனுக்குச் செய்தியனுப்புவர் என்பதனையும், "பூத்தமை சேடியிற் புரவலர்க் குணர்த்தலும்" - எனக் குறிக்கின்றது. அதன் அறிகுறியாகத் தோழிக்கு வெள்ளை ஆடையுடன் வெள்ளே மலரையும் குட்டி அனுப்புவாள். இதற்கும் மலர் அறிவிப்புப் பொருளாகப் பயன்பட்டது.

19 தொல்காப்பியம்: பொருள்: 185 - 20 ந. அகப்பொருள்: 61. நம்பி அகப்பொருள்: 34.