பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இந்தப் பூப்புப் பக்குவம் அடைதற்குக் கீழ் எல்லேயாக 12 அகவை குறிக்கப்பட்டது. இப் பக் குவ த் தி ல் தா ன் அவளுக்கு இவ்வுணர்வு அரும்புகின்றது. இதுபோது அவள் மலர்கின்ருள் எனலாம். ஆணுல் மணம் பரவவில்லை. போது: மலராகும் பக்குவம் அறிந்துதான் வண்டு அணுகி மலரில் இசைக்கும். இயற்கையில் மலர் விரியத் துவங்கும்போது இசையின் தழுவலால் மலராகி மணக்கும். இதுபோன்றே, பக்குவமடைந்த மங்கையைப் பருவமடைந்த விடல அணுகித். தழுவுவான். அத்தழுவலால் அவள் மணம் பெறுவாள். இக் கருத்தை உள்ளடக்கியே மணத்தல் என்னும் சொல் எழுந், தது. மணத்தல் என்ருல் கூடுதல் - தழுவுதல் என்று. பொருள். - -

அன்பும் இன்ப ஆர்வமும் எழுச்சி பெற்ற இருபாலார் தோளொடு தோள் தழுவ அவர்தம் தோள்கள் இன்பத். தினவில் நிற்பது பூரிப்பு எனப்படும். இதனைத் திருக்குறள்,

22 "தணந்தநாள் சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்" -என்றது. கூடுதல்' என்று பொருள்தரும். மணத்தல்' என்னும். சொல்லின் எதிர்ச்சொல் தணத்தல் என்பது. இரண்டு. சொற்களும் எதுகையால் ஒன்றிலுைம், பொருள் மாறு: படுபவை. இது தமிழில் கையாளப்படும் ஒரு சொல்லமைப்பு

முறை. -

தழுவிய பின்னர் கன்னிப்பெண் மணந்தவள் ஆகின்ருள்: விடலயும் அவ்வாறே.

23 "மாலையோ அல்லே மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது" -என்னும் குறள் பெண்ணே மணந்தவளாகவும், . .

2 திருக்குறள்: 1239 23 திருக்குறள்: 1221.