பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

2. " மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

கால அறிந்த திலேன்" -என்னும் குறள் ஆனே மணந்தவனுகவும் காட்டுகின்றன.

எனவே,

'பூ, மலர்ந்து பூத்து வண்டின் தழுவலால் நறுமணம் வீசம்.

பூவையும், மங்கையாகிப் பூத்துக் காதலர் தழுவலால் திருமணம் பெறுவாள்.

ஆம்,

மலரின் நறுமணமே

மங்கையின் திருமணம்.

மலரின் நறுமணமே மங்கையின் திருமணம் என்னும் போது எந்த மலரின் நறுமணம் என்னும் கினேப்பு ஊறுகின்றதன்ருே? அங்கினைப்பில் முல்லையின் நறுமணம் முகிழ்க்கின்றது. ஆம் முல்லைதான் இங்கும் மங்கையொடு வருகின்றது. -

இடையில் முல்லே மலரைப்பற்றிய ஒரு விளக்கம் வேண்டியதாகின்றது. முல்லை அம்மலரினுல் பெயர்பெற்ற முல்லே கிலத்தில் கருப்பெற்ற மலர். முல்லே காடும் - காடு சார்ந்த நிலமுமாகையால் முல்லேயைக் காட்டு மலர் எனலாம். இது காட்டு மல்லிகை எனவும் வழங்கப் பெறும். ஆயினும் முல்லை வேறு; மல்லிகை வேறு. மல்லிகைக்கு இதழ்கள் முல்லையைவிட மிகுதி. இதழ்கள் அடுக்கியதாக அமைவது. அஃது அடுக்கு மல்லிகை எனவும் படும். முல்லையின் இதழ் மல்லிகையின் இதழைவிடக் குட்டையானது. உரையாசிரியர் கள் முல்லேயைக் காட்டு மல்லிகை என்றே குறித்துள்ளனர். முல்லை காட்டு நிலத்தின் கரு ஆயினும் பிற நிலங்களிலும் பரவியது. -

  • திருக்குறள் : 1926.