பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

முல்லையின் ஒட்டு வளர்ச்சிதான் மல்லிகை. எனவே முல்லை. தான் மூலம். வாழ்வியலில் முல்லைதான் இன்றியமையா இடம் பெற்றது. சில மன்னர்களின் சின்னமாகவும் முல்லையே அமைந்தது. பிற நான்கு கிலத்து மலர்களிலும் முல்லேயே மணத்திலும் மங்கலத்திலும் நிற்பது. எவ்வகையில் நோக்கி னும் முல்லை ஒரு தனித்தன்மை கொண்ட சிறப்புடையது. கார்காலத்தில் சிறப்பாக மலர்வது, பொதுவாகப் பிற. காலங்களிலும் மலர்வது.

"பூவிற்குத் தாமரை

பொன்னுக்குச் சாம்புகதம் " என்பர். தாமரை தன் கிறத்தாலும், பருமையாலும் இதழ்களின் நிறைவாலும் தலைமை கொண் டது. மணத்தாலும் மங்கலத்தாலும் முல்லைக்கு அடுத்த கிலேயில்தான் தாமரை அமையும், தெய்வத் தன்மையில் திருமகளும் கலைமகளும் கான்முகனும் அமரும் தகுதி பெற்ற தாமரை பூக்களில் சிறப்பாகக் குறிக்கப்படுவது. வாழ்வியலில் மிகுதியும் இடம் பெற்றது. முல்லையே.

திருமணம் பெறும் மணமகளும் மணமகனும் ஆயிரம் காலத்துப் பயிர் எனப்படுவர். அந்த ஆயிரங் காலத்துப் பயிரின் அணிகலன் முல்லை. திருமணம் முல்லையின் நறு மனத்தின் அடித்தளங் கொண்டது என்பதற்குத் தமிழர்தம் குடும்பங்களில் அமைந்த மரபு ஒன்றை அறிய வேண்டும்.

ஒரு பெண்-பெதும்பைப் பருவத்தவள் 10 ஆண்டு 10 திங்கள் கிறைந்தால் மங்கையாகப் பக்குவம் பெறுவாள் (இக்கணக்கு ஓரளவான காலக் கீழ் எல்லையே யாகும்) அவள் பக்குவம் பெற்ற அன்றே - அஃதாவது அவள் பூத்த அன்றே தனது இல்லத்து முற்றத்தில் ஒரு முல்லைக் கொடியை நடுவாள். தனது பூப்பைப் பெற்முேரிடம் வாய்: திறந்து கூற நானுவாளன்ருே? இங்கிலையில் தன் நிலையை அறிவிக்கும் அறிகுறியாகவும் இம்முல்லையை நடுதல் அமைந்: தது. இக்குறிப்பால் பெற்ருேர் கிலேயை உணர்ந்து பூரிப்பர்.