பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

அறியாமல் - குறிப்பால் உணர்ந்து வருவாள். அத்துடன் கொள்வன, கொடுப்பன, பரிசம், சீர் முதலியவற்றை உணர்ந்து வருவாள். .

முன்ருவது முதியவள் மணப்பெண்ணின் சமையல் திறத்தை அறிவதற்காகவே செல்பவள், அல்லது அழைத்துச் செல்லப்படுபவள். மணமகளது குனகலன்களுடன் அவளது சமையல் திறனே அறிவது இன்றியமையாததாகக் கருதப் பட்டது. சங்க இலக்கியங்கள் இச்சமையற் பாங்கை வெவ்வேறு இடங்களில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு பேசுகின்றன. தற்காலத்துப் பாவேந்தர் பாரதிதாசனுரும்,

" வீருர்ப்பு வாழ்வு தன்னை

மேற்கொண்டார் என்ருல், அன்னுர் சோருக்கிக் கறிகள் ஆக்கிச்

சுவையாக்கக் கற்றதால் ஆம் " - என்று சமையற்பாங்கின் பயனேப் பாடினுர்.

பெண்பார்க்க வங் திருப்போ ருக்கு ரிய விருந்தை மணமகளே சமைக்க வேண்டும் என்பது மரபு. அவளது திறத்தை உணவுச் சுவையால் மட்டுமன்றி, சமைக்கும் .பாங்காலும் அறிய முதியவள் முந்துவாள். அவ்வீட்டார் விருந்துக்குத் தொகுத்துவைத்துள்ள கறிகாய்களே இம் முதியவளே அரிந்து வைப்பாள். இம்முதியவள் சமையல் திறத்தில் தேர்ந்தவளாக அமைவாள். இவள் அரிந்து வைக்கும் காய்கறிகளின் பருமன், அளவு, பாங்கு முதலிய வற்றை மணமகள் குறிப்பால் உணரவேண்டும். அக் குறிப்பால் இது கூட்டுக்கு உரியது; இது பொரியலுக்கு உரியது; இது வருவல் செய்யவேண்டியது; இது குழம்புக்கு ஆவது -என வகை தெரிந்து சமைக்க வேண்டும். முதியவள் வாய் திறந்து கூறமாட்டாள், மணமகளும் உசாவி அறியக் கூடாது. யாவும் குறிப்பால் நிகழும். i