பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

மகளிர் பருவங்களில் பெதும்பைப் பருவம் கன்னித் தன்மைக்கு அடித்தளம் கொள்ளும் பருவம், எனவே இப்பருவம் கன்னித் தன்மை கொண்டதாகும். சிலம்பு கன்னித் தன்மையின் சின்னமாகவே அணிவிக்கப்பட்டது. கன்னிமை நிறைவேறிக் கழிந்ததும் இச்சின்னமும் அகற்றப்பட்டது. ஆம், சிலம்பு திருமணத்திற்கு முன்னர் கழற்றப்பட்டது. கழற்றப்படினும் இது கன்னிமையின் சின்னமாகப் போற்றிக் காக்கப்பட்டது. பழுதுபடாமல் பேணப்பட்டது. அவ்வப் போது கவனிக்கப்பட்டு மெருகேற்றிச் செவ்வைப்படுத்தப் பட்டது. கழிந்த தமது கன்னிப் பருவத்தின் கினேலுற்றம் எழும்போது அதனே அணிந்து மகிழ்வர்.

இவற்றிற்கெல்லாம் இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.

கண்ணகியார் தம் அணிகலன்கள் யாவற்றையும் இழந்த போதும் சிலம்பை மட்டும் இழக்காமல் காத்ததன் காரணம், அது கன்னிமையின் சின்னமாகப் போற்றப்பட்டமையே. அதனேயும் அவள் விற்க முன்வந்தது அவளது அவலத்தின் அறிகுறியாகும். பாண்டிமாதேவியின் சிலம்பு பொற் கொல்லன்பால் செம்மைப்படுத்தச் சென்றதும், அவன் அதனே மறைத்ததும், அதல்ை அரசி கவன்றதும் மேலே காட்டிய கருத்துக்களே வலியுறுத்துகின்றன.

பெதும்பைப் பருவத்தில் அணியப்படும் சிலம்பு, இடை யில் அறவே கழற்றி விடப்படுவதில்லே. ஆனால், சிலபோது வாய்ப்பிற்காகக் கழற்றப்படுவதுண்டு.

காதல் தலைவி தான் விரும்பிய தலைவனுக்கு மணம் செய் விக்கப் பெற்ருேர் இசையாதபோது அவள் அவைேடு உடன் போக்கை மேற் கொள்ளுவாள் அன்ருே? இரவில் விடியற் போதில், வீட்டார் அறியாதபடி அவள் புறப்படுவாள். சிலம்புடன் காலடியை எடுத்து நடப்பின் சிலம்பின் கலீர் தலீர் ஒலியால் உறங்குவோர் எழுவர் என்று கருதிச்