பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

சிலம்பு கழி கோன்பு மணமகளது தாய் வீட்டில்தான் கிகழ வேண்டும். களவு மணத்தில், அழைத்துச் சென்றவன் சென்ற இடத்திலும் இதன் நிகழ்த்திவிடுவான். மீண்டு தனது வீட்டிலும் நிகழ்த்துவான். இது முறைக்குச் செய்யப் :படினும் ஒழுங்குடன் நிகழாததாகும். மேலும் இவ்விழா ஒரு மணவிழாவாகச் சீருடனும் சிறப்புடனும் கொண்டாடப் படவேண்டும். விழாக் கோலம் பூண்ட இல்லத்தில்,விருக் துடன் நிகழ வேண்டும்.

இதற்கு மாருக நிகழ்ந்துவிட்டதைக் கேள்வியுற்ற மணமகளின் தாய் ஒருத்தி நொந்து போனுள்:

38 " எனது மகள் போன இடத்தில் சிலம்பு கழி நோன்பைச் செய்தாளே! வறுமையுள்ள பெண்கள் கூடி .யிருக்கச் செய்தாளே! விழாவின்றிச் செய்துகொண்டாளே! வைக்கோல் வேய்ந்த குடிசையில் நிகழ்த்தினளே ஓர் ஆவையே கொண்ட எளிய குடும்பத்தில் செய்தாளே! ஒரு துணே நாட்டப்பட்ட முற்றத்தில் செய்துகொண்டாளே! எந்தச் சீரும் வழங்கப் பெருமல் போயிற்றே! விருந்தில்லா வெற்று மனேயில் நிகழ்ந்ததே! இவ்வாறு செய்துகொள்ளவும் இசைந்தாளே! நான் கோகின்றேனே!” - என நொந்து பேச வைத்தார் நக்கீரர். -

அழைத்துப் போனவன் திரும்பவரின் சிலம்பு கழி நோன்பையும், வதுவை மணம் என்னும் திருமணத்தையும் தனது இல்லத்திலேதான் நிகழ்த்திக்கொள்ள விரும்புவான். புகுந்த வீட்டில் நிகழ்வதை மணமகளைப் பெற்ற தாய் பொறுத்துக்கொள்ள மாட்டாள்.

38 " சீரும் சிறப்பும் இன்றிச் சீறுார்

நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் ஏதில் வறுமனைச் சிலம்பு உடன் கழீஇ மேயினள் கொல்? " என நோவல் யானே"

- அகநானூறு 389