பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

தழற்றுவான். கழற்றிய சிலம்பை அவள் கையில் வழங்கு வான். - -

இவ்வாறு சிலம்பைக் கழற்றுபவன் மணமகன் என்பதை ஒரு சீர்க்குழாயடிச் சண்டை போன்ற ஒரு பூசல் வெளிப் படுத்துகின்றது :

மதுரையில் வையையாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. மகளிரும் மைந்தரும் நீராட வருகின்றனர். தலைவியும் அவள் தோழியர் கூட்டத்துடன் வருகின்ருள், நீராடப் பரத்தையர் பலரும் வந்துள்ளனர். அவனுக்கு வேண்டிய ஒரு பரத்தையைத் தோழி கண்டுவிட்டாள். குத்தலாகப் பேச்சு தொடங்கி ஏச்சாகியது. 'நீ விலக் கணிகை; பொதுமகள்; வாய்த்தொட்டி, புனலாட்டி, காமக் கலப்பை. பழைய பானே; திருடி’ என்றெல்லாம் பரத்தையை ஏசினுள். அவளும் தோழியையும் குறிப்பாகத் தலைவியை யும் சாடினுள். -

உன் அன்பன் எனக்கும் அன்பன்தான். ஆணுல் நான் திருடி அல்லள்; அவன்தான் திருடன். அவன் உனது தலைவிக்குப் பரிசமாக மாலே போடப் பொன் வழங்கியது போன்று உனக்கும் தருவானடி மண நிகழ்ச்சியின்போது சிலம்பு கழி கோன் பில் உன் தலைவியது காலைத் தொட்டுச் சிலம்பைக் கழற்றினுனே அதுபோல உனது சிலம்பைக் கழற்றுவாண்டி' - என்று ஒரு போடு போட்டாள்.

40 " மாலை அணிய விலைதந்தான், மாதர்கின்

கால சிலம்பும் கழற்றுவான்" என்ருள். பரிபாடல் காக்தாரப் பண்ணில் இசைக்கும் இப்பாடல் சிலம்பு கழற்று பவனேச் சுட்டிக் காட்டுகின்றது.

இங்கு ஒன்றை நினேவிற் கொள்ள வேண்டும். இடைக் காலத்தில் பல தமிழ் மரபுகள் மாறித் தடம் புரண்டன

சில பரிபாடல் : 20.