பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

4 " மறுவில் மங்கல அணி "என்கின்றது. சிலம்பு.

இவை தாலியைக் குறிப்பதாக உரையாசிரியர்கள். அரைகுறையாகவே எழுதியுள்ளனர்.

தாலி என்ருல் என்ன? அது எப்பொருளில் துவங்கி எவ்வாறு தொடங்கி எவ்வாறு தொடர்ந்தது: -

தாலம் என்னும் சொல்லுக்கு பனே, காக்கு, நிலம். உண்கலம் எனும் பலபொருள்கள் உள. பனே ஒலேயில். பெயரும் வாழ்த்தும் பொறித்து காணில் கட்டிக் கழுத்திலோ கைகளிலோ கட்டினர். கழுத்தில் கட்டப்பட்டது அசைக். தாடும். இவ்வாறு அசைந்தாடும் அணிகள் தாலி எனப். பட்டன. அதன் இடத்தினேப் புலிப்பல் பிடித்துக்கொண்டது.

ஒரு வீரன் தன் வீரத்தின் அறிகுறியாகத் தான் கொன்ற புலியின் பல்லேக் கொணர்ந்து அதனேயே மங்கலச் சின்னமாக அணிவித்தான். இஃது அக்குடும்பப் பழக்கமாகி' பல்கிப் பரவி பெருமரபாகிவிட்டது. இப் புலிப்பல் தாலி சிறுவர்க்கும் அணிவிக்கப்படுவதுண்டு.

  • "புலிப்பல் தாலிப் புன்றலைச் சிருர்" என்று புறநானூற்று” அடி குறிப்பிடுகின்றது.

மங்கல நானே உரையாசிரியர்கள் மங்கலச் சூத்திரம் என்று எழுதிக்காட்டினர். மங்கல நூல் என்றும், மங்கல நாண் என்றும் வழங்கினர். "பொன்தாம்பு" என்று. தேவாரம் பாடுகின்றது. "மறுவில் மங்கல அணி" என்பதற்கு, அரும்பத உரை ஆசிரியரும் அடியார்க்கு கல்லாரும் மங்கலச் குத்திரமும் ஆகும் என்று அரைகுறையாகவே குறித்தனர். இதற்குக் காரணம் உண்டு.

  • சிலப்பதிகாரம் ; 2: 64
  • புறநானூறு : 374, -
  • "பொற்ரும்பு காணுதே போதியோ பூம்பாவாய்”

சம்பந்தர் தேவாரம் : மயிலாப்பூர் : 9.