பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

கண்ணகியார் கணவனே இழந்து மதுரையை விட்டு நீங்கும் எல்லேயில் தாம் மங்கலத்தை இழந்ததன் அறிகுறி யாக ஒன்றைச் செய்தாள். அங்கிருந்த கொற்றவை. கோவிலின் முன் தாம் கையில் அணிந்திருந்த வளேயலே - சங்கு. வளையலே உடைத்ததாக உள்ளது. அதுபோதும் மங்கல. நாண் குறிக்கப்படவில்லை.

சி "கொற்றவை வாயில் பொற்ருெடி தகர்த்து"

இவ்வாறு கைம்பெண் ஆனதும் கைவளேயைக் கழற்று வதையும் உடைப்பதையும் பண்டை இலக்கியங்கள் பாடு: கின்றன:

  • 'அறனில் கூற்றம் திறனின்று துணிய

ஊழின் உருப்ப வெருக்கிய மகளிர் வாழைப் பூவின் வளைமுறி சிதற"

‘போர்க்களத்தில் கூற்றுவன் சிறிதும் அறம் பார்க் காமல் வீரனைக் கைப்பற்றத் துணிந்தான். அந்த இழர் பால் மார்பில் அறைந்துகொண்டே ஓலமிட்ட அவனது. உரிமை மகளிர் தமது கையிலணிந்திருந்த வளையல்களே முறித்து வாழைப்பூ இதழ் சிதறுவது போன்று சிதறினர்" என்கின்றது புறகானூறு. மேலும் அந்நூலே,

" "தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடி" என்றும்

" "கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி" என்றும் பாடு: கின்றது.

சி சிலம்பு ; 23; 181. * புறநானூறு: 287. 49 புறம் ; 237. 50 புறம் : 250.