பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இவைகொண்டும், பிற இலக்கியங்கள் அறிவிக்கும் கருத்துகள் கொண்டும் மங்கலக் கழிவிற்குக் கைவளையைக் கழற்றுதல் மரபாக இருந்ததை உணரலாம். எனவே, இக் கைவ&ாயலே மங்கலச் சின்னமாக அணியப்பட்டிருக்க வேண்

டுமன்ருேt அதனேயும் சங்க நூல்கள் காட்டுகின்றன:

  • "மணம்புணர்ந்து ஓங்கிய அணங்குடை நல்லில்

ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர்" -என்னும் மதுரைக் காஞ்சி அடிகள் இதனைக் குறிக்கின்றன. மணமகளது தந்தை இடுவளேயை வழங்குவதும், மணமகன் மணமகளுக்கு அணிவிப்பதும் மணமகன் வீட்டார் பரிசமாக வளையை அணிவிக்கச் செய்வதும் இலக்கியங்களில் உள்ளன. -

இக்காலத்துக் கரணங்கனில் கங்கணம் கட்டுதல் என்பது ஒன்று. இது மங்கலச் சின்னமாகக் கைவளையலை அணிவித்த மரபு தடம் புரண்டதைக் காட்டுவதாகும். முன்னர் மகளுக்கு மட்டும் அமைந்தது இதுபோது இருவர்க் கும் ஆயிற்று. வளேக்கு மறுபெயர் கங்கணம் என்பதைப் பிங்கல நிகண்டு : - -

32. "வளையும் தொடியும் கடகமும் கங்கணம்" - எனச் சொல்கின்றது.

இவை நிற்க,

மண நிகழ்ச்சிகள் யாவும் மணமகளது பிறந்த வீட்டி லேயே நிகழும். மணமகன அழைத்தல், பரிச விழா, சிலம்பு கழி கோன்பு, மணமகனுக்கு மயிர் மண்ணுதல், மணமக்களே நீராட்டுவிழா, வதுவை மணம், முதல் இரவு நிகழ்ச்சி ஆகிய யாவும் மணமகளது தாய் வீட்டிலேயே கிகழும். இப்போதும் மாமியார் வீட்டிற்கு மணமகன் செல்வதை மருவுங்க” என்று மருஉ மொழி

31 மதுரைக்காஞ்சி : 578, 579.

北艺2 பிங்கல நிகண்டு : 1.1??.