பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இன்றியமையாத சிறப்புடையது. ஆனால், உணவிற்கு அன்றித் தனியே தூவிப் பயன்படுத்தும்போது அது பலிப்பொருள் வெள்ளரிசி பலிப்பொருள் என்பதை,

"தூய்மையான வெள்ளை அரிசியைப் பலிப் பொருளாகத் தூவினர்" - எனப் பட்டினப்பாலை கூறுகின்றது. வெள்ளரிசி தனியாக. மட்டும் அன்றி ஆட்டுக் குருதி கலக்கப்பட்டும் பலிப்பொரு ளாகும். அது வெறியாட்டுக்கு உரிய பலிப்பொருள். இக் கருத்தை, -

  • "ஆட்டுக் குருதியுடன் கலந்த தூய்மையான வெள்ளை அரிசியை வெறியாட்டின்போது சிறு பலியாகச் செய்தனர்" !

- எனத் திருமுருகாற்றும்

படையிலும் பிற இலக்கியங்களிலும் காண்கின்ருேம்.

வெள்ளரிசி பலிப்பொருளாவது போன்று அரிசியில் சமைக்கப்பட்ட சோறும் பலிப்பொருளாயிற்று. -

  • "காவல் மன்னர் கடைமுகத் துடுக்கும்

போகுபலி வெண்சோறு போல" - என்று உறையூர் முதுகூத்தனர் பாடல் அறிவிக்கின்றது. இங்கும் சோறு: "வெண்சோறு" என்று குறிக்கப்பட்டுள்ளதும் நோக்க த் தக்கது. -

"வாலரிசிப் பலிசிதறி" - பட்டினப்பாலே : 165. "குருதியொடு கலந்த தூவெள் ளரிசி சில்பலி செய்து" -திருமுருகாற்றுப்படை : 258, 234, * "நெல்லும் பொரியும் சில்பலி யரிசியும் - . .

யாங்கணும் பரந்த ஓங்கிரும் பறந்தலை"

- - - மணிமேகலை 6 : 95, 96