பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

வாய்க்கு அரிசி.

பூம்புகாரின் புறநகரில் "சக்கரவாளக்கோட்டம்" என்பது ஒரு பகுதி. அங்கு சம்பாபதி, கந்திற்பாவை முதலிய சிறு தெய்வங்களுக்குக் கோட்டங்கள் இருந்தன. "உலக அறவி" என்னும் பொது அறமன்றம் இருந்தது. இவற்றுடன் இடு காடும் சுடுகாடும் இருந்தன. இவற்ருல் அதனைச் 'சுடுகாட்டுக் கோட்டம்” என்றும் ஊரார் வழங்கினர்.

அக்கோட்டத்தை விவரிக்கும் மணிமேகலைக் காப்பியம்,

சக்கரவாளக்கோட்டம் என்றும் அச் சுடுகாடு பெயர்பெற்றது; பெரியது. அங்கு எங்கும் நெல்லும் பொரியும் சிறு பலியாகத் துவப் பட்ட அரிசியும் பரவிக் கிடக்கும்’ - - என்று அங்கு சிதறிப் பரவிக் கிடக்கும் பொருள்களைக் காட்டுகின்றது.

சிறு பலியாகத் துவப்படும் அரிசி "கில்பலி அரிசி" எனப்படும், இவ்வாறு சிறு பன்ப்பொருளாகக் குறிக்கப் பட்ட வெள்ளர்சி பினங்களுக்கு வாயில் துரவப்பட்ட பினப் பலிப்பொருள். தெய்வங்களுக்கு அரிசியைப் பலிப்பொரு ளாகத் தூவுவது போல இறந்தோர்க்கும் பலிப் பொருளாக அரிசி தூவப்பட்டது. பிணத்தின் வாய்க்குப் போடப்படு வதால் இது "வாய்க்கரிசி" எனப்பட்டது.

மாங்தன் உயிருடன் வாழ உண்டு பழகிய அரிசியைத் தமிழர் வாழ்வின் இறுதியிலும் வாயில் போட்டு ஒரு மன அமைதி கொண்டனர். பிணம் பசியோடு போகவேண்டாம் என்ற எண்ணம் போலும், பசி போக்குவதை ஒரு நோன் பாகக் கொண்ட தமிழர் பிணத்திற்கும் பசி உண்டென்று கருதினர் போலும்.

  • “நெல்லும் பொரியும் சில்பலி யரிசியும்

யாங்கணும் பரந்த ஓங்கிரும் பறந்தலை" -

- - - மணிமேகலை 6 95, 96.