பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இவ்வாறு பிணத்திற்கு வாயில் போடப்படும் செயல் இல்லத்து முற்றத்திலும் நிகழும்; சுடுகாட்டிலும் நிகழும். இல்லத்தில் பெண்கள் வாய்க்கரிசி இடுவர். சுடுகாட்டில் ஆடவர் இடுவர்.

அரிச்சந்திரன் வீரவாகு என்னும் சுடுகாட்டுப் பணியா ளனிடம் அடிமையானன். வீரவாகு சுடுகாட்டுக் கட்டணப் பொருள்களில் அரிச்சந்திரனுக்கு உரியதையும் தனக்குச் சேர்க்க வேண்டியவைகளேயும் குறிப்பிட்டான்.

5 " எனக்குநீ பணமும், கொள்ளி ஆடையும் இனிது நல்கி, உனக்கு வாய்க்கரிசி தந்தேன்,

உண்டிரு பசியை நீக்கி"

-என்றது அரிச்சந்திரபுராணம்.

பாம்பு தீண்டி இறந்த மகன் தேவதாசனைச் சுடலையில் எரியூட்டும் சந்திரமதியைக் கண்ட அரிச்சந்திரன் சுடலைக்குச் சேரவேண்டிய கட்டணத்தைக் கேட்டான். தன் இல்லா மையைச் சொல்லி அழுதாள். தன் மனைவி என்றறியாத கிலேயில் அவன், - -

"அன்னவன் தான் படியாக எனக்குத் தந்த

வாய்க்கரிசி யானளிப்பேன் அறிதி என்ருன்”

சந்திரமதி மகனுக்கு வாய்க்கரிசி இடுவதற்கு உதவுவ தாகக் குறித்தான். இது கொண்டும் சுடுகாட்டில் வாய்க்கரிசி இடும் பழக்கம் இருந்ததை உணரலாம்.

வாய்க்கரிசியைப் புத் தரிசியாகவே கொண்டனர். இறந்த செய்தி வந்ததும், இல்லத்துப் பெண்கள் வீட்டில்

  • அரிச்சந்திரபுராணம் : காசிக்காண்டம்: 62 6 * * - ; மயான காண்டம் : 40.