பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

பலிப்பொருள் வேறு. காப்புப்பொருள் வேறு. வழி பாட்டு - வாழ்த்துப் பொருள் வேறு. படையல் பொருள் வேறு. - -

பொரி, அவல் முதலியன பிணத்தைப் பேய் என்னும் காற்ருவி அணுகாமல் காக்கச் சிதறப்படும் காப்புப் பொருள் கள். அக்கோட்டத்தில் உலவியதாகக் கருதும் காற்ருவிக்குச் சிதறப்பட்ட காப்புப் பொருளாம். பொரியும் சிதறிக் கிடந்தது 8 பொரி இவ்வாறு சிதறப்படுவதைத் திருமுருகாற்றுப். படை "செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி " - என்கிறது.

நெல், மலர் அறுகம்புல் முதலியன தெய்வத்தை வழி: படவும் வாழ்த்தவும் கொள்ளப்படும் மங்கலப் பொருள்கள். சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லாரும், l

9 " மலரையும் அறுகையும் நெல்லையும் -

மங்கலமாகச் சிதறி " - என்ருர். -

இங்கு ஒன்றை கினேவு கொள்ளவேண்டும். நெல், புல், மலர் மூன்றும் இயற்கை விளேவு. பொரி, அவல், அரிசி, சோறு முதலியவை இயற்கை விளைவின் சிதைவு. கெல்லின் சிதைவாகிய இவை மங்கலப் பொருளாகக் கொள்ளப் படாமைக்குக் காரணம் இவை சிதைவான பொருள்கள் என்பது போலும்.

மலர் பலியாகத் துரவப்படுவதும் உண்டு. ஆயினும்: இது பிணப் பலிப்பொருள் அன்று. தெய்வப் பலிப்பொருள் ஆகும்.

சக்கரவாளக் கோட்டத்தில் அமைந்த சம்பாபதி, கந்திற்பாகை முதலிய தெய்வங்களே வழிபட்டு-வாழ்த்திச் சொர்ந்த கெல்லும் சிதறிக் கிடந்தது. இவ்வகையில் சிதறிக்

8 திருமுருகாற்றுப்படை : 281 9 சிலப்பதிகாரம்: 6: 194 உரை.