பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

' " அணிகளால் ஒப்பனை செய்யப்பட்ட பெண் யானை மீது ஏறிப் போயினர். வயலில் அ டித் தாள் தழைத்துள்ள செந்நெல் கதிர் க அள ச் சூடிக்கொண்டனர். தம் ஆர்வம் தணியாதவர்களாக வயலில் விளையாடினர். மன்னன் தம் அழகைப் பாராட்ட இருந்தனர்" - -என்று பெண்கள் மகிழ்ச்சிக் காலத்தில் கெற்கதிரைச்சூடி. அழகு செய்து கொண்டதைக் குறிக்கின்றது சீவக சிந்தாமணி. இது கெற்கதிரை மட்டும் சூடிக்கொண்டதற்குச் சான்று: இஃது அரசகுல மகளிர் நெற்கதிரைச் சூடிய செய்தி.

உழவர் குல மகளிர் கெற்கதிரைச் குடிக்கொண்டதைச் சேக்கிழார் காட்டுகின்ருர்,

12 வயலில் எளிய புலைச்சியப் பெண்கள் கூந்தலில் விரிந்த குவளைப் பூவைச் சூடியிருந்தனர். குவளையிலிருந்து தேன் வழிந்தது. அத்துடன் சேர்த்து நெற்கதிரைச் சூடினர் -எனப் பெரிய புராணம் உழவர் குல மகளிர் மலருடன் நெற்கதிர் சூடியதைக் காட்டுகின்றது. -

அரசகுல, உழவர் குல மகளிரேயன்றி மன்னவரும்ஆடவரும்- நெற்கதிரைச் சூடிக்கொள்வது உண்டு. பாரி மன்னன் போருக்குப் புறப்பட்டார். அவன் வெற்றி கருதி ஆம்பல் மலரைச் சூட நினைந்தான். அத்துடன் மங்கலங்கருதி நெற்கதிரையும் எடுத்து,

' 'பணியார் பண்ணுப் பிடியுயர்ந்து,

பருக்காற் செந்நெற் கதிர்சூடித் தணியார் கழனி விளையாடித்

தகைபாராட்டித் தங்கினர்' -

-சீவக சிந்தாமணி : 2699 * “..... தளையவிழ்பூங் குவளைமது

விள்ளும்பைங் குழற்கதிர்நெல் மிலேச்சிய புன் புலைச்சியர்கள்' -பெரியபுராணம் : திருநாளைப்போவார் : 1.0.