பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

வளமான வயலில் விaரத்த நெற்கதிரைக் கையில் கொண்டு அத்துடன் பருத்த தாளையுடைய ஆம்பல் மலரோடு சேர்த்துச்சூடினன்' . . . -அகநானூறு காட்டும் இக்கருத்தால் மன்னர் நெற்கதிரை மலருடன் சூடிக்கொண்டதை அறிய முடிகின்றது.

நெற்கதிரை மங்கலமான மலரணி போன்று மகளிரும் ஆடவரும் சூடினர், அரண்மனையினரும் சூடினர். வயல் வெளியினரும் சூடினர். மலரோடு சேர்த்தும் சூடினர். தனியாகவும் சூடிய பழக்கத்தையும் காண்கிருேம்.

நெற்கதிர்மா?ல.

நெற்கதிர் மலருடன் தனியாகச் சூடப்படுவது மட்டு மின்றி மலருடன் மாலையாகத் தொடுக்கப்படுவதும் உண்டு. உழவுத் தொழிலில் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கும் முதல் மங்கல நிகழ்ச்சி "பொன்னேர் பூட்டுதல்” ஆகும். இஃது ஒரு மங்கல நிகழ்ச்சியாதலால் இலக்கியங்கள் இதனை "ஏர் மங்கலம் ' என்று பேசும். அது போது குவளேப் பூ, அறுகம்புல் இரண்டையும் கலந்து, கெற்கதிரை வைத்து மாலேயாக்கி இப் பொன்னேர்க்கு அணிவிப்பர்.

' கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து

விளங்குகதிர் தொடுத்த விரியல்" (விரிந்த மாலை) சூட்டி -என்று சிலப்பதிகாரம் காட்டுகின்றது. செல்லே விளைவிப் பதற்கு கெல்லேயே மா லே யா க் கி யது மங்கலத்தினும் மங்கலம். இதுபோன்று நாற்று கடும்போது அங்காற்றையே மங்கல அணியாக, நாற்று கடும் உ ஆ த் தி ய ர் சூடிக் கொண்டதையும் கிலம்பு காட்டுகின்றது.

13 "செழுஞ்செய் நெல்லின் விளகதிர் கொண்டு தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி" அகநானூறு : ?8, : 17, 18.

  • சிலப்பதிகாரம் ; 10. : 182. 188.