பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

.திருமணம் பெருது கன்னியாகவே இறந்த பெண்களேயும்

இல்லுறை தெய்வங்களாகக் கொள்வதுண்டு. அன்னர் .பருவமடைந்து தாய்மைத் தன்மை பெறும் பக்குவம் பெற்றதனால் அவரும் மங்கலப் பெண்களாகவே கொள்ளப்

பட்டனர்.

வீட்டின் ஓர் அறையில் மாடம் அமைத்து அவர்

கினேவாக அதில் விளக்கு வைத்து நாள்தோறும் ஏற்றி

வணங்கினர். பகற்பொழுது கழிந்து இரவு தொடங்கும் நேரத்தில்,

19 ' இரும்பால் செய் யப் பட்ட விளக்கில் நெய் தோய்ந்த திரியை இட்டனர். விளக்கேற்றினர். கெல்லேயும்

மலரையும் தூவிக் கை தொழுது வழிபட்டனர்'

இக்கருத்தினைப் பல இலக்கியங்களிலும் காணலாம். எனவே, இவ்வழிபாடு ஓர் இல்லறக்கடமையாக இருந்ததை

உணர முடிகிறது. -

இன்றும் இல்லங்களில் ' சாமி அறை ' என்ற ஓர் அறை இருத்தலும், அங்குள்ள மாடத்தில் விளக்கிருத்தலும், அவ்விளக்கு "நாச்சியார்’ எனப்பெண்பாலாய்ச் சொல்லப் .படுதலும், அதனிலும் "காச்சியார்’ என "ஆர்" விகுதி கொடுத்துப் பெருமைப்படுத்தலும் காம் அறிந்தவை. பெண்களேக் 'குடும்ப விளக்கு", "குல விளக்கு ' என்பர். இலக்கியங்களில் -

15 'இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ

நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது"

-நெடுநல்வாடை : 42, 43.