பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

- என்றும் எழுதிக் காட்டினர் . இவ்வுரைகள் கொண்டு: முல்லே மலரைச் சூடுவதற்கு ஒரு தகுதி வேண்டுமென்றும், அத்தகுதி கற்புத் தகுதி என்றும் அறிகின்ருேம். ' கற்பின் எல்லைக்கு முல்லை அளவு ’ என்பதையும் காண்கின்ருேம். இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளும் காணப்படுகின்றன.

ஒப்பன ஒன்றும் செய்துகொள்ளாத கண்ணகியார் கூந்தலில் மட்டும் மலர் சூடியிருந்தார். அதனைச் சிலம்பு,.

2' " போதுசேர் பூங்குழல்" என்றது. அதனை விளக்கிய அடியார்க்கு நல்லார் " முல்லை மலர் பற்று அருத பூங்குழல்" என்ருர்,

2 அழகிய நெற்றியை உடைய தலைவி முல்லை மலரைக் கற்பின் முடியாகச் சூடித் தன் பக்கத்தே வீற்றிருக்கத் தலைவன் இனிது இருந்தான் - என்று ஐங்குறுநூறு காட்ட,

2 நல்ல குலத்திற் பிறந்த கற்புடைய பெண்களுக்கு வளப்பமான முல்லே மலரைச் சூடுவது சிறப்பாகும் - எனக் குலோத்துங்கக் கோவை விதித்துக் கூறியது. மங்கல மகளிர்க்கு முல்லை மலர் கற்போடு பேரழகு எனக் கொள்ளப் ه التي سأساسا

முல்லேயைச் செண்டாக்கித் தலையிற் குடுவர். இது முல்லைச் சூட்டு ' எனப்பட்டது. -

27 ' பன்னிறச் சுரும்பு சூழும்

24 சிலப்பதிகாரம்: 13 : 22. 2 ஐங்குறுநூறு : 408: 2, 8. 28 குலோத்துங்கக் கோவை : 188 27 சீவக சிந்தாமணி : 624.