பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார்." - எனச் சிந்தாமணி கூற, முல்லைச் சூட்டைக் கற்பிற்குத் தலையிலே சூட்டினர் ' என்று நச்சிளுர்க்கினியர் விளக்கினர். இம்முடிச்சூட்டைப் பெண் கடவுளர்க்கும் ஏற்றிப் பாடினர். காளியைப் பாடும் ஒட்டக்கூத்தர்,

28 'திருவடியில் அணிந்திருக்கும் அணியை நூபுரங் கள் என்னலாமோ? அவை திருமறைகள் அல்லவோ! முடி யில் குடியிருப்பது முல்லையோ? அது மேம்பட்ட கற்பு அன் ருே!” - என முல்லைச் சூட்டைக் கற்பாக்கி நயத்துடன் வண்ணித்தார்.

தமிழ் நாட்டில் கன்னிப் பெண்களுக்கெனச் சில மரபு கள் இருந்தன. அவற்றுள் ஒன்று முல்லேக்கொடி வளர்த்தல். இதனே,

? “ எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த

முற்றிழையாள் வாட முறுவலிக்கும்” - என்பது கொண்டு உணரலாம். இக்கொடி வளர்ப்பையும் பெண் கடவுளர்க்கு ஏற்றிப் பாடினர் ஒட்டக்கூத்தர். ' தேவி கொற்றவை கைவிடாது வளர்த்த முல்லேக்கொடி நூருயிரம் கிளேவிட்டுத் தழைத்ததாம். இக்கருத்தை விளக்கிய .பழைய உரை ஒன்று,

' தேவி முல்லை வளர்த்தற்குக் காரணம் கற்புடைமை என உணர்க' - என்கின்றது. இத்துடன் காளி குமரி என்பதையும் கூட்டி உணர வேண்டும்.

28 அடிச்சூட்டு நூபுர மோ? ஆரணங்கள் அனைத்துமே முடிச்சூட்டு முல்லையோ? முதற்கற்பு முல்லையோ'

- தக்கயாகப்பரணி : 119. -2 தண்டியலங்கார உரை மேற்கோள் வெண்பா. 30 துதிக்கோடு கூர்கலை உகைப்பாள் விடாமுல்லை

துருயிரங் கிளைகொடு ஏறும் ”

- தக்கயாகப்பரணி : 75