பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

முறித்ததாகிவிடும். இவ்வாறு ஒருத்தியைச் சிக்கித் தவிக்க வைத்துக் காட்டுகின்றது கலித்தொகை.

இப்பேதைப் பெண் ஒன்று செய்து அச்சத்தைத் தவிர்த். திருக்கலாம். முல்லை மலர் வெளியே தெரியாமல் உள்ளே பொதிய வைத்துக் கூந்தலைக் கோதி முடித்திருக்கலாம். மறுநாளில் மலர் காய்ந்ததும் எடுத்து எறிவது தவறு ஆகாது. இதற்கும் அதே கலித்தொகை இடம் தரவில்லை.

இதுபோன்று சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணே அவளது தோழி கிண்டல் செய்து பேசுகின்ருள்: -

  • தோழியே, எனது ஐம்பார் கூந்தலேக் காயவைத்துக் கொண்டிருந்தேன். முதல் நாள் ரோடிய எண்ணெய்யின் மணம் இல்லாமல் முல்லே மணம் கூந்தலிலிருந்து வீசியது. யாரும் அறியாமல் முதல் நாள் காதலன் சூட்டிய முல்லே. தோய்ந்ததால் வந்த மணம் அது. எனது கூந்தலில் முல்லை. மணம் வீசியதை அறிந்த எனது தமையன்மார் கொல்லும் காளே போன்று சினந்து பாய்ந்தனர். என்னதான் பாய்ங். தாலும் உள்ளத்துள் பாய்ந்துள்ள காதலே ஓய்ந்து போகச் செய்ய முடியுமா? - என்று தலைவியின் கிலேயைத் தன்மேல் ஏற்றிச் சொன்னுள். -

கன்னிப் பெண்ணேக் கொண்டு கலித்தொகை அறிவிக்கும். கருத்து யாது! முல்லேப்பூ தலையில் ஏறினல் காதல் தலேக் கேறிவிட்டது என்பதன்ருே முல்லையை முடியிற் குடில்ை கற்பு முடிசூடிக்கொண்டதாகக் கொள்ளும் மரபு தமிழ் மரபாக இருந்தது.

"நறுநுதால் என்கொல் ஐங்கூந்தல் உளர சிறுமுல்லை நாறிய தற்குக் குறுமறுகு பொல்லாது உடன்று அமர் செய்தார், அவன்கொண்ட கொல்லேறு போலும் கதம்” - கலித்தொகை : 1.05.