பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

இம்மரபு கொண்டே கற்புடைப் பெண்டிரது வழிபாடாம் இல்லுறை தெய்வ வழிபாட்டில் கெல்லுடன் முல்லை மலர் தூவப்படுவது மரபாக இருந்தது. இம்மரபு யாவரும் அறிந்த அடிப்பட்ட மரபாக இருந்ததால்தான் நெடுநல்வாடையும் நெல்லொடு துரவப்பட்ட மலர் இன்ன மலர் என்று வெளிப் படையாகக் குறிக்க வேண்டாது போயிற்று. சிலம்பும் மற். ருேர் இடத்தில் "அலர்" என்று குறிப்பாக இசைத்தது.

முல்லே - கற்பின் எல்லே,

இப்படிப்பட்ட உலக வழக்கையெல்லாம் உள்ளத்துக் கொண்டுதான் தொல்காப்பியர் கற்புடன் இல்லத்தில் இருத் தலுக்கு "முல்லைத் திண" என்று பெயரிட்டார். நல்ல நோக்கத்திற்காகப் பிரிந்து சென்ற கணவர் மீளும் வரை இல்லத்தில் கலங்காது இருக்கும் கற்பு கிலேயே "இல் இருத் தல்" என முல்லையாக இலக்கணம் விதிக்கப்பட்டது. இதனைக் 33. "கற்பு முல்லை" என்றது புறப்பொருள் வெண்பா மாலை. இல் இருத்தலாம் அடிப்படையைக் கொண்ட இலக்கியம் "முல்லைப்பாட்டு" என முல்லைப் பெயரால் அமைந்தது.

கற்பு என்பது கலங்கா நிலையது. "கற்பென்னும் திண்மை" என்ருர் திருவள்ளுவர். இக்கலங்காத் தன்மை யாம் நெஞ்சுரத்தை வேறு துறைகளில் காட்டிய ஆடவர், பெண்டிர் செயல்களும் கற்புக்குரிய "முல்லை" என்ற சொற் கூட்டி, "ஏருண் முல்லை" என்றும், "மூதின் முல்லை" என்றும் துறைகளாகப் புறப்பொருள் வெண்பா மாலையில் அமைக் கப்பட்டுள்ளன.

32 தொல்காப்பியம் : பொருளதிகாரம் : 16. 33 புறப்பொருள் வெண்பா மாலை : 18, * திருக்குறள் : 54. - .