பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

ஆமல்லே மலரை நிறைத்துக் கொண்டு தூவி வழிபடுவர். இக்கருத்தையும் முல்லைப் பெயர்கொண்ட இலக்கியமாகிய :முல்லைப்பாட்டு,

37 "நாழி கொண்ட நறுவி முல்லை

அரும்பவிழ் அலரி தூய்க் கைதொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப"

- என்று பாடிக் காட்டியது.

கிடைக்கும் பலவகைச் சான்றுகளில் எல்லாம் வாழ்த் துக்கு உரிய மங்கலப் பொருளாக நெல்லும் மலருமே காணப் படுகின்றன. ஆல்ை, நிகழும் திருமண வாழ்த்து நிகழ்ச்சி களில் அவலப் பொருளாம் அரிசியே தூவப் படுகின்றது.

நெல்மங்கலம்.

தை பிறந்து வழி பிறந்ததும், வீட்டில் வளம் பெருக கெற்கதிரைப் புதிராகக் கொண்டு புகுவர். இஃது ஒரு மங்கல நிகழ்ச்சியாகவே கருதப்படும். உறவினர் இல்லங் களுக்கும் வளம் பெருக புதிர் கெல் அனுப்பி வாழ்த்துவர். வளத்தின் மங்கல அறிகுறியாக நெற்கதிரை மாலையாக்கி யும் தொகுத்தும் இல்லத்து வாயில் கிலேகளில் மங்கல தோரணமாகக் கட்டுவர்.

ஆணுலும், ஆயிரங் காலத்துப் பயிராகிய மணமக்களின் வாழ்த்திற்கு அவலப் பொருளாம் அரிசியையே தூவுவர்.

கரணங்களோடு சடங்குகளோடு ) கிகழும் திருமண நிகழ்ச்சியில் நெல் இடம் பெறும் நிகழ்ச்சிகளும் உண்டு. மணமக்கள் அமரும் இருக்கையாம் மணவறையில் நெல்லேப்

3 ' நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்

செம்முது பெண்டிர் சொல்லும்"

- புறநானூறு : 289 : 6, 7, 37 முல்லைப்பாட்டு : 9 : 1.1.