பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

பரப்புவர். அதன்மேல் புதுப்பாயை விரிப்பர். அதன்மேள்: மணமக்களே அமர வைப்பர். மணமகளே இல்லத்துள் வர. வேற்கும்போது மணமகளின் மடியில் நெல்லேப் பொதிய. வைத்து செல் வளத்துடன் அழைப்பர். மரத்தாலான படியில் நெல்ல நிரப்பி மணமகளின் கையில் ஏந்தச் செய்து இல்லத். துள் அழைப்பர். இதை " நிறை காழி" என்பர். தாலிகட் டப்பட்ட பின் மரப்படியில் காழி நெல் கொண்டு அதனை மங்கலப் பெண்டிர் ஏந்தி மணமக்களேச் சுற்றிக்காட்டி வாழ்த்துவர். .

முல்லை மலர் மாலைகளே மணமக்கள் கழுத்தில் அணிவிப் பர். முல்லை மலராலேயே மணமகளின் கூந்தலுக்கு ஒப்பனே செய்வர். சில குடும்பங்களில் மணமகனேக் கொண்டு மன மகள் கூந்தலில் முல்லைச் செண்டைச் சூட்டச் செய்யும் பழக்கம் இன்றும் உள்ளது. கழுத்தில் இடப்பட்ட முல்ல்ே மாலையை முதியோர் எடுத்து இறைவனே வேண்டி மணமக்களை வாழ்த்துவதாக அணிவிப்பர். இருப்பினும் வாழ்த்துப் பொருளாகத் துவப்படுவது அரிசிதான்.

இதற்கு மேலும் ஓர் அவலம் உண்டு. மஞ்சள் பூசாத வெள்ளரிசியை இரு கைகளாலும் பிடியாக அள்ளி மண மக்கள் இருவருக்குமாகச் சேர்த்துத் தொடையிலிருந்து மேலேற்றிச் சுற்றிச் செ ச ரி க் து வாழ்த்துவர். இது "மணமிடுதல்" எனப்படும், இந்த அருமையான அவலத்தை மணமக்களது பெற்ருேரும் கெருங்கிய உறவினருமே உரிமை யுடன் செய்வர். ஆனால், இதே பெற்றேர், தம் மகளுக்கு, அனுப்பும் பொருள்களில் அரிசியை அனுப்ப ஒப்பார். பிறந்தகத்திலிருந்து அரிசியை அனுப்புவது அவலம் என்று மறுப்பர். நெல்லே மகிழ்வுடன் அனுப்புவர். ர்ே முகக்கும். குடத்தைப் பரிசாக வழங்கும்போது அதில் நீர் நிறைத்தோ, கெல் நிறைத்தோ, அத்துடன் மலர் தூவியோ வழங்குவர். புக்ககத்தில் மருமகள் புகும்போது தம் வீட்டிற்கு வரும் மருமகள் மங்கலத்துடன் வரவேண்டும் என்னும் குறிப்பில் கிறைகாழியுடன் வரவேற்பர். z -