பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இவ்வாறு நெல்லோடு முல்லையைத் தூவி வாழ்த்தும். அரபு பழந் தமிழகத்தில் இருந்தது என்ருல் அம்மரபுக்குச் சான்று தமிழ் இலக்கியங்களில் உள்ளதா என்னும் விஞ. எழுதல் முறையானதே. மரபு என்ருல் இலக்கியச் சான்று இல்லாமலா போகும்! -

பழங்காலத் திருமண நிகழ்ச்சி “ வதுவை மணம்” எனப்பட்டது. இவ்வதுவை மணத்தின் அக்கால முறையை அகநானூறு அறிவிக்கின்றது. "உழுந்து தலைப்பெய்த" என்று துவங்கும் அப்பாடல் மறையவர் இடம் பெற்ற தாகவோ, கரணங்கள் நிகழ்ந்ததாகவோ செய்திகளேத் தரவில்லை. மங்கலப் பெண்களே இடம்பெற்ற கிகழ்ச்சி' களைக் காட்டுகின்றது. பின் வருவன அவை :

  • மனைவிளக்கு வைத்தனர். கும்மிருட்டு அகன்று கிழக்கு. வெளுத்து வரும் காலைப் பொழுது அது. மாலைகளைத் தொங்கவிட்டு மணவறை அ ைமத்த னர். மக்களைப் பெற்றெடுத்த மங்கல அணி மகளிர் நால்வர் கூடினர். ' கற்பில் தவருது வாழ்க! இல்லற நலன்கள் பலவற்றை இல்லத் தலைவனுக்கு உதவுக! கணவனுக்கு உகந்த மனைவி' ஆகுக' என வாழ்த்துக் கூறினர். கூறி வாழ்த்துக் கலவையாக நீருடன் முல்லைப் பூவையும் நெல்லையும் சொரிந்தனர். சொரியப்பட்ட முல்லை மலரும் நெல்லும் கருங்கூந்தலில் அமைந்து விளங்க வதுவை மணம்: நிகழ்ந்தது. இதனே,

? " நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி (முல்லை) பல்லிருங் கூந்தல் நெல்லொடு தயங்க வதுவை நன்மணம் கழிந்த பின்றை ' - என்று. அப்பாடல் கூறுகின்றது.

  • அகநானூறு : 36 15-17.