பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

மண நிகழ்ச்சியில் தமிழ்ச் சான் ருேர் இடம் பெறுதல் உண்டு. ஆயினும் அன்னேர் சான்றுக்காகவே அமைவர். கிகழ்ச்சிகள் யாவற்றையும் மங்கல மகளிரே நிகழ்த்துவர். அக்காலத் திருமணமே பெண்கள் பகுதியாகத்தான் இருக் தது. அப்பகுதியிலும் மணமக்களே வாழ்த்துவதே மண நிகழ்ச்சியில் இ ன் றிய ைம யாத தா. க இருந்தது. அவ் வாழ்த்துக்குத் தூவப்பட்ட மங்கலப் பொருளாக நீருடன் கெல்லும் மலருமே (அம்மலர் முல்லை மலர் என்பதை முன்னர் காட்டிய சான்றுகளால் உணரலாம்.) கைக் கொள்ளப்பட்டன.

அகநானூற்றுப் பாடலின்படி அக்காலத் திருமணத்தில் கரணங்களோ மறையவரோ வடமொழி மந்திரமோ இடம் பெறவில்லை. கரணம் உண்டானதைக் குறிக்கும் தொல் காப்பியம் அதற்குரிய காரணத்தையும் குறிக்கின்றது :

" மக்களுக்குள் பொய்யும் ஒழுக்கக் குறைபாடும்

தோன்றி நாணயம் குன்றியதால்தான் சான்ருேர்

கரணத்தை வகுத்தனர் - எனத் தொல்காப்பிய நூற்பா காட்டுகின்றது. எனவே, நாணயம் உள்ள மக்கட்குக் கரணம் வேண்டாத ஒன்று என்ற கருத்தையும் அதனுல் பெற முடிகின்றது.

இவ்வாறு உண்டாக்கப்பட்ட கரணமும் வாய்ப்பும் வளமும் கொண்டு இன்ப காட்டத்தில் திளைத்த மேலினத்து (மறையவர், மன்னவர், வணிகர் மூவர்) மக்களுக்காகத் தான் கொள்ளப்பட்டது. உழைப்பில் ஊன்றி அளவான வாழ்வில் நின்ற வேளாளர் - உழவர் பெருமக்கள் கரணத்தைக் கொள்ளாமலே மண நிகழ்ச்சியை நிகழ்த்தினர்.

க9 " பொய்யும் வழுவும் தோன்றிய

ஐயர் (தலைவர்) யாத்தனர் கரணம் என்ப"

- தொல் : பொருள்: 148.