பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

சந்தனம் பூசி, மஞ்சள் காப்புக் கட்டிப் பட்டுக் கட்டுவர். மங்கல இசையுடன் மங்கல மகளிர் மூவரோ ஐவரோ கைப் பிடித்து மணவறை முன்னே நடுவர். இக்காலத்தில் அரசங் கிளேயை விட்டு ஒதிய மரத்துக் கிளேயை கட்டு நிகழ்த்துவர்.

- அரசங்கிளேயைக் காலாக ஊன்றியதால் "அரசாணிக்

கால்" எனத் தவருகக் கருதினர்.

திருமணத்திற்கும் அரச மரத்திற்கும் என்ன தொடர்பு மணவறை முன்னே அதனே கடுவதில் என்ன கருத்திருக் கிறது? எக்கருத்தும் இல்லேதான். ஆனால், இந்நிகழ்ச்சி வேறு ஒரு பொருத்தமானதும் சிறப்பானதுமான காரணத் . தால் தோன்றியது. அஃது என்ன? -

முன்காலத்தில் மக்கள் தொகை குறைவு. இக்காலத்து ஓர் ஊராட்சி மன்றத்து அளவு எல்லேயைக் கொண்ட ஒரு சிறு பகுதிக்குக் கூட குறுநில மன்னன் என்ற பெயரிலோ வேள் என்ற பெயரிலோ, வள்ளல் என்ற சிறப்பிலோ ஒரு மன்னன் தலைவகை இருப்பான். அப்பகுதியில் ஒருவர் இல்லத்தில் ஏதேனும் நிகழ்ச்சி நிகழுவதானல், அவர் மன்னனே அணுகி விவரம் கூறுவார். அங்கிகழ்ச்சிக்கு அரசனது இசைவு ஆணேயை வழங்குமாறும் வேண்டுவார். நிகழ்ச்சிக்கு வருகைதந்து வாழ்த்த வேண்டுமென்று வேண்டு வார். அரசனும் வேண்டுகோளே ஏற்று நிகழ்ச்சிக்கு இசைவு தருவான். தக்க அலுவலர் வழி தனது இசைவு ஆணேயை யும் வழங்குவான். இது குடிமக்கள் மன்னனை தம் குடித் தலைவனுகவே கருதிப் போற்றினர் என்பதற்கும் அறிகுறி யாகும்.

நிகழ்ச்சிக்கு இசைவு ஆணே வழங்கிய மன்னன் நிகழ்ச்சிக்கு ஏற்ப வருகை தந்து சிறப்பிப்பான் வாழ்த்தி மகிழ்விப்பான். நிகழ்ச்சிகள் பலவாக அமையின் தனது வருகையின் அறிகுறியாக, தனது செங்கோலே அனுப்பும்.