பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

ஆண்மையின் சின்னம்; :பண்மையின் சின்னம்.

கெல் ஆடவரது உழைப்பின் வெற்றிப் பயன்; வளத்தின் சின்னம் முல்லை மலர் மகளிரது கற்பின் முழு உருவம்: மணத்தின் சின்னம். ஆணும் பெண்ணும் இணையும் இல்லற விழாவில் ஆண்மையின் உழைப்புச் சின்னமும், பெண்மையின் கற்புச் சின்னமும் இணேதல் கருத்துக்களின் இனப்பாகும்: பொருள்பொதிந்த பொருத்தமும் ஆகின்றது. இவ்விரண்டும் கருதியே பழந்தமிழர் இம்மரபைக் கைக்கொண்டனர்.

அரிசியை வாழ்த்துக் கலவையாகக் கொள்ளுவதில் கருத்தும் இல்லை; களிப்பும் இல்லை. இரண்டும் அற்ற இந்த மரபு எவ்வாறு புகுந்தது?,

தமிழ் மரபு தடம் புரண்டது.

வடபுலத்தாராக வந்து தமிழரிடையே இடங் கொண்டோர் தமிழரது உழைப்பைக் கொண்டே பயன் பெற்றனர் வாழ்ந்தனர். தாம் ஆற்றும் மறைவழிப் பணி களுக்கு ஊதியம் - கூலி என்றில்லாமல் காணிக்கை என்று பெற்றனர். காணிக்கையாகப் பெறப்படும் பொருள்கள் உடனே பயன்படுத்தத் தக்கனவாக இருத்தல் வேண்டும் என விரும்பினர். நெல்லேக் காணிக்கையாகப் பெறுவதை விட அரிசியைப் பெறுவதே அவருக்குப் பயன்படுத்த எளிதாக இருந்தது. (ஐயமிடும்போதும் அரிசியையோ சோற்றையோதான் இடுகின்ருேம்; நெல்லேயோ இடுவோம்?) அதனுல் அவர் அரிசியே மேல் எனக்கொண்டனர். அதனே அன்னுர் அவலப் பொருளாகக் கொள்வதில்லை. அவ்வாறு கொள்ளாததை இன்றும் அன்னர் கைக்கொண்டு வரும் பழக்கங்களாலும் உணரலாம். ஒன்று காணலாம் :

பார்ப்பனர் இல்லங்களில் நிகழும் நல்ல நிகழ்ச்சி களுக்குச் செல்லும் அன்னரது நெருங்கிய உறவினர் ஒரு